இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பால் மட்டுமின்றி, அவருடைய யதார்த்தமான இயல்பு, பணிவு மற்றும் எளிமைக்காக பெரிய எண்ணிக்கையிலான மக்கள் அன்பை பெற்றவர். வெளியிலும் திரையிலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் ஒரு ஈர்ப்பு அவரிடம் எப்போதுமே இருக்கும். இது எல்லோருக்கும் கிடைத்துவிடாது, பிரபலங்களுக்கு மிகவும் அரிதான விஷயமாகும். இதனை பல ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக இழக்காமல் இருந்து வருபவர் சூப்பர்ஸ்டார். அதற்கு சமீபத்திய வீடியோவே ஆதாரம். நேற்று (புதன்கிழமை) இரவு, ரஜினிகாந்த் மும்பை விமான நிலையத்திற்கு வருகை தர, அங்கு கூடியிருந்தவர்கள் குதூகலம் அடைந்தனர். சிலர் அதனை தங்கள் மொபைலில் கிளிக் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். எப்போதும் போல ஈர்க்கும் புன்னகையுடன், அவரது டிரேட்மார்க் வணக்கத்தோடு ரசிகர்களை வரவேற்கும் புகைப்படங்கள் வைரலாகின.



எப்போதும்போல சிம்பிளான ரஜினி


மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரஜினிகாந்த் சென்றிருந்தார். சூப்பர் ஸ்டார் தனது காரை நோக்கி செல்லும்போது, ரசிகர்களை சிரித்து வணக்கத்துடன் வரவேற்றார். பெரும் நட்சத்திரம் என்று காட்டிக்கொள்ளாமல் எப்போதும்போல சிம்பிளான உடையில் அவர் கருப்பு டிராக் பேண்ட் மற்றும் சாதாரண செருப்புடன், வெள்ளை டி-சர்ட் அணிந்து சென்றிருந்தார். இதே போல ஒரு நாள் முன்பு, ரஜினிகாந்த் விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்தபோது, அவர் இதே போல வெள்ளை டீ ஷர்ட் மற்றும் கருப்பு டிராக் பேண்ட் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: Karnataka CM: 20ஆம் தேதி பதவியேற்கும் சித்தராமையா.. துணை முதல்வராக சிவக்குமார்: கை மாறுகிறதா முக்கிய இலாக்காக்கள்!


லால் சலாம் 


தற்போது ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்று வருகிறார் என்று தகவல்கள் வருகின்றன. இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் அவர் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, அவரது பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு அவருடைய லுக் பலரால் ட்ரோல் செய்யப்பட்டது. அவரது புதிய தோற்றத்தை ரசிகர்கள் விரும்பினாலும், போஸ்டர் டிசைனால் பலர் ஏமாற்றமடைந்தனர். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






ஜெயிலர்


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. அவர் அந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் ஒரு பயங்கரமான பின் பக்கம் கொண்ட சாதாரண மனிதராக நடிக்கிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட்டின் ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயிலர் படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.