இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகிய திரைப்படம் ஜெயிலர் 2. இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஜெயிலர். இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 

Continues below advertisement

ஜெயிலர் 2 கொண்டாட்டம்:

இந்த படத்தின் தொடர்ச்சியாக வெளியாகிய ஜெயிலர் 2 நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளே ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ள நிலையில், நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

1. பில்டப்பிற்கு நோ:

ஒரு படத்தின் வெற்றிக்கு விளம்பரம் என்பது மிக மிக அவசியமாக உள்ளது. அதே சமயம் அதே விளம்பரம் எல்லை மீறினால் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி படத்தை தோல்வி அடையச் செய்கிறது. அதற்கு கடந்தாண்டு வெளியான ரஜினியின் கூலி திரைப்படமே ஒரு சான்றாகும். மேலும், டாக்சிக், பாரடைஸ் போன்ற படங்களின் தோல்வியும் ஒரு உதாரணம். இதனால், ஜெயிலர் 2 படத்திற்கான விளம்பரங்களை படக்குழு போதிய அளவிலே மேற்கொண்டது. இது படத்திற்கு சாதகமாக மாற்றியது.

2. பான் இந்தியாவிற்கு நோ:

சமீபகாலமாக இந்திய சினிமாவை வீழ்த்தி வரும் ஒரு விஷயமாக பான் இந்தியா கலாச்சாரம் மாறி வருகிறது. ஒரு மொழியில் எடுக்கும் படத்தை இந்திய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என இந்தியா முழுவதும் பெரும்பான்மையான திரையுலகில் ரிலீஸ் செய்வதை வழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளனர். பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா படங்களின் வெற்றியைப் போல வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணம்.

ஆனால், அந்த பான் இந்தியா விளம்பரத்தால் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டு அதுவே இணையத்தில் விவாதத்தை உருவாக்கி மோசமான எதிர்மறை கருத்துக்களை உருவாக்கி படத்திற்கு எதிர்வினையாற்றுகிறது. மேலும், திரைக்கதை பலவீனம் போன்ற காரணத்தாலும் படம் சுமாரான வெற்றியைக்கூட பெறாமல் தோல்வி அடைகிறது. இதற்கு நானியின் பாரடைஸ், யஷ்ஷின் டாக்சிக், சூர்யாவின் கங்குவா, பிரபாஸின் சலார் போன்ற படங்கள் ஒரு உதாரணம். 

ஜெயிலர் 2 படமும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் பான் இந்தியா விளம்பரத்தை படக்குழு கையில் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக அளவான விளம்பரப்படுத்துதலையே படக்குழு கையில் எடுத்தது.

3. திரைக்கதை:

எப்பேற்பட்ட உச்ச நடிகர் நடித்த படமாக இருந்தாலும் அந்த படத்தின் வெற்றிக்கு பலமாக இருப்பது கதையும், திரைக்கதையுமே ஆகும். ஜெயிலர் 2 படமானது ஜெயிலர் படத்தின் தொடர்ச்சி என்பது அனைவரும் ஏற்கனவே அறிந்தது. ஒரு பழிவாங்கும் படலமாக இந்த படம் இருந்தாலும் படத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் வலுவாக திரைக்கதை அமைத்ததே ஜெயிலர் 2 குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். 

4. அக்மார்க் ரஜினி படம்:

பொதுவாக ரஜினிகாந்தின் படங்கள் என்றாலே ஆக்ஷன், காமெடி,    சென்டிமென்ட் கலந்த படமாகவே இருக்கும். அவரது பிரம்மாண்ட வெற்றிப்படங்களான சந்திரமுகி, பாட்ஷா, படையப்பா, முத்து, எஜமான், மன்னன் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். அவரது கூலி படத்தில் அது இல்லாத நிலையில், இந்த படத்தில் அந்த அம்சங்கள் அனைத்தும் இருப்பதால் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

5. கேமியோக்களுக்கும் ட்ரீம்:

சமீபகாலமாக படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் படத்தின் நீளம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி என கேமியோக்கள் பட்டாளமாக உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், படத்தின் நீளத்திற்காக அவர்கள் பலரின் காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அவர்களது ரசிகர்களுக்கு வேதனையாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையை வலுப்படுத்தும் நோக்கில் இயக்குனர் நெல்சன் நீக்கியுள்ளார். இது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக மாறியுள்ளது.

6. இசை:

பொதுவாக, படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய பங்களிப்பை படத்தின் இசை தீர்மானிக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்களிப்பை அனிருத்தின் இசை வகித்தது. அவரது பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை ஈர்த்தது. ஜெயிலர் 2 படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் அவரின் பிஜிஎம் காட்சிகள் ரசிகர்களை கட்டிப்போட வைத்துள்ளது. இது படத்தின் வெற்றிக்கும் காரணமாக மாறியுள்ளது.