விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இது சீனியர் - ஜூனியர் என்ன எட்டு சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சி. 


போட்டியாளர்கள் பிரபலங்கள் ஆகும் அதிசயம்:


உன்னிகிருஷ்ணன், மனோ, கே.எஸ். சித்ரா, அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன், கல்பனா, ஷங்கர் மஹாதேவன், மால்குடி சுபா என பலர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்து வந்துள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் போட்டியாளர்கள் பலருக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்து இன்று அவர்களும் ஒரு பிரபலங்களாக வலம் வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல. 


 



சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 :


சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 சீசன் முடிவடைந்தது. அதன் டைட்டில் வின்னராக கிரிஷாங் தேர்வு செய்யப்பட்டார். இதன் இறுதி போட்டியில் அஃபினா, ட்ரினிடா, ரிஹானா, நேஹா மற்றும் கிரிஷாங் தேர்வானார்கள். அவர்களின் பர்ஃபார்மன்ஸின் அடிப்படையில் மக்களின் வாக்குகளின் படி கிரிஷாங் டைட்டில் வின்னர் ஆனார். ரிஹானா இரண்டாவது இடத்தையும் நேஹா மூன்றாவது இடத்தையும் பெற்றனர். 


ஸ்டார்ஸ் கனடா பயணம்:


சூப்பர் சிங்கர் ஸ்டார்ஸ் உலகளவில் பிரபலம். அடிக்கடி அவர்கள் உலக சுற்றுலா சென்று அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஸ்டார்ஸ் பரத், புன்யா, அய்யனார், ஷிவாங்கி, கார்த்திக் தேவராஜ், முக்குத்தி முருகன், பிரியங்கா, ஸ்ரீதர் சேனா மற்றும் பலர் கனடாவில் நடைபெறும் ஒரு  கான்சர்ட்டுக்காக சென்றுள்ளனர்.


அங்கு அவர்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு குரூப்பாக நின்று கொண்டு "சில் அல்லவா சில் அல்லவா..." என்ற நயாகரா பாடலை பாடி ஒரு ரீல் எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சூப்பர் சிங்கர் ஸ்டார் பிரியங்கா. அவர்களின் அந்த ரீல் வீடியோ உங்களுக்காக இங்கே உள்ளது. பார்த்து என்ஜாய் செய்யுங்கள். 


 






 


இனிய குரலால் நம்மை கவர்ந்த பரத், ஷிவாங்கி, முக்குத்தி முருகன் ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்று மிகவும் பிரபலமாகி விட்டனர். அவ்ரக்ளுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.