Super Singer Priyanka : பாட்டு மட்டும் பாடல...நடிக்கவும் செய்த சூப்பர் சிங்கர் பிரியங்கா - பிசாசு 2 புரமோஷன் வீடியோ

Continues below advertisement

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மிக இனிமையான தேடல் பிரியங்கா. அவரின் குரலுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஜூனியர் சீசனில் சிறிய பெண்ணாக பங்கேற்றவர் தனது திறமையால் இன்று ஒரு பின்னணி பாடகியாக வளந்துள்ளார். சிறிதும் அலட்டிக்காத அவரின் இயல்பான தன்மை இன்றும் அவரை நிலை நிறுத்தியுள்ளது. பல் மருத்துவரான பிரியங்கா தனது படிப்பை முடித்ததும் இசை மீது இருக்கும் அலாதியான ஆர்வத்தால் அதில் மும்மரமாக இறங்கிவிட்டார். 

Continues below advertisement

இசையின் மீது தீராத தாகம் :

இசை நிகழ்ச்சிகளுக்காக உலக சுற்றுலா செல்வது, இசை ஆல்பங்களை வெளியிடுவது போன்றவற்றில் மிகவும் பிஸியாக இருந்து வரும் சூப்பர் சிங்கர் பிரியங்கா தற்போது படங்களிலும் பாடி வருகிறார். அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகவுள்ள பிசாசு 2 படத்தில் "நெஞ்சே கேளு..." என்ற பாடலை பாடியுள்ளார். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளர் கார்த்திக் ராஜா. 

 

 

விளம்பர வீடியோவில் நடித்த பிரியங்கா:  

பாடல் பாடியது மட்டுமல்லாமல் படத்தின் புரமோஷன் வீடியோவிலும் ஆண்டிரியாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த விளம்பர வீடியோவிற்கான ஷூட்டிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடைபெற்றது. அதில் படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா மற்றும் பிரியங்கா இனைந்து இதில் நடித்துள்ளனர். பொதுவாகவே மிஷ்கின் கலை வண்ணம் அற்புதமாகவே இருக்கும். அந்த வகையில் இப்படத்தின் பாடல்களிலும் தூள் கிளப்பி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். 

 

இயக்குனர் மிஷ்கின் பற்றி:

பிசாசு 2 படத்தில் பாடிய அனுபவம் குறித்து சூப்பர் சிங்கர் பிரியங்காவிடம் கேட்ட போது " எனக்கு மிஷ்கின் சார் பாடலின் அனுபங்களை எல்லாம் மிகவும் அழகாக புரிய வைத்தார். அந்த பாடல்களுக்கு ஏற்ற உணர்வை கற்று கொடுத்தார். ஒவ்வொரு டேக் முடிந்த பிறகும் பாராட்டியது என்னை மேலும் ஊக்குவித்தது" என்றார் பிரியங்கா. தமிழ் மட்டும் தெலுங்கு இரு மொழிகளிலும் பிரியங்கா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசாசு 2 படத்தின் விளம்பர வீடியோவில் கடற்கரை ஓரத்தில் எடுக்கப்பட்டு இருப்பதால் அதன் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தன. வீடியோவில் இடையிடையே பாடலின் லிரிக்ஸை பாடியுள்ளார். புரமோஷன் வீடியோவில் பாடுவது இதுவே முதல் முறையாகும். ஆரம்பத்தில் பயந்ததாகவும் பிறகு மிஷ்கின் கொடுத்த தைரியத்தால் நன்றாக நடித்ததாகவும் பிரியங்கா கூறினார்.