“டன்டானா டர்னா” மொட்டைமாடியில் விஜய் போல நடனமாடி கலக்கிய சூப்பர் சிங்கர் ஆஜித்!
ஆஜித் பிக் பாஸ் ஜோடிகளில் கலந்துக்கொண்ட பிறகு அவரது நடன திறமை மேம்பட்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

கடந்த 2012 ஆண்டு சூப்பர் சிங்கர் சீஸன் மூன்றில் பங்கேற்று கலக்கியவர் ஆஜித். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தொலைக்காட்சிகளில் தலைக்காட்டாமல் இருந்த ஆஜித் மீண்டும் பிக் பாச் சீசன் 4 இல் பங்கேற்றார். அதன் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கேபியுடன் அசத்தி வருகிறார். கேபி மற்றும் ஆஜித் ஜோடிகளுக்காகவே பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளமாம். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குருவி படத்தில் இடம்பெற்ற “டன்டானா டர்னா” என்னும் பாடலுக்கு அச்சு அசல் விஜய் போலவே நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஜித் பிக் பாஸ் ஜோடிகளில் கலந்துக்கொண்ட பிறகு அவரது நடன திறமை மேம்பட்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆஜித் ஒரு நல்ல பாடகர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதே போல தற்போது பிபி ஜோடிகள் மூலமாக தனது நடன திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆஜித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்பற்றுபவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆஜித் ஒரு சிறந்த நடிகரும் கூட. முன்னதாக தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியில் ஆரம்ப நாட்களில் இவர் செய்த ஆக்டிங் வீடியோக்கள்தான் , இவரை மீண்டும் விஜய் டிவி அடையாளம் காண காரணமாக அமைந்தது எனலாம்.
ஆஜித் 2014 ஆம் ஆண்டு திக்கி திணறுது தேவதை என்னும் ஆல்பம் பாடல் , அதே ஆண்டில் வெளியான பூவரசம் பீப்பீ என்னும் தமிழ் திரைப்படத்தில் ‘ஆங்ரி பேர்ட்ஸ்’ என்னும் பாடலை பாடியுள்ளார். அதன் பிறகு ஒரு வருடத்தில் படு பிஸியாக வெளிநாடுகளுக்கு சென்று பல மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த ஆஜித்திற்கு தனது 11 வயதில் ஏற்பட்ட குரல் மாற்றம் காரணமாக பல வாய்ப்புகளை இழந்ததாகவும் மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கு குறைய தொடங்கியதாகவும் வேதனை தெரிவிக்கிறார் ஆஜித். தற்போது 18 வயதாகும் ஆஜித் பன்முக திறமைகளில் அசத்தி வருகிறார். மேலும் பல வெற்றிகளை தொட வாழ்த்துக்கள் ஆஜித்!