இல்ல தரசிகளை டார்கெட் செய்து ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு திரைப்படங்களுக்கு ஏற்ப வரவேற்பு கிடைக்கிறது.  பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் சீரியல்கள் பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் மட்டும் கிட்டத்தட்ட 18 சீரியல்கள் ஒளிபரப்பு தினம் தோறும் ஒளிபரப்பாகிறது. மாலையில் வரும் தொடர்கள் தான் டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற்று வருகின்றன.


அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் முடியப் போகிறது என்றால் அதற்கு மாற்றாக புதிய சீரியல் ரெடியாகவே இருக்கும். அப்படி தான் இப்போது ஒரு சீரியல் முடிய போகிறது. அது வேறு எந்த சீரியலும் இல்லை. கடந்த 2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மலர் என்ற தொடர் தான். இந்த சீரியில் தொடங்கி 550 எபிசோடுகளை தாண்டி விட்டது. டிஆர்பி ரேட்டிங்கில் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர பிளான் போட்டுள்ளனர்.


இதனால் இந்த தொடர் கிளைமேக்ஸ் காட்சிகளை நெருங்கி வருகிறது. இந்த சீரியல் முடிந்ததும் அதற்கு பதிலாக பூங்கொடி என்ற தொடரை தொடங்க உள்ளனர். இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புரோமோவில், வீட்டில் பெண் பிள்ளைகள் படிக்க மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இடையிலான பாச பிணைப்பை இந்த தொடர் எடுத்து காட்டும் என்று தெரிகிறது.


இந்த சீரியலில் ஸ்வேதா லீடு ரோலில் நடிக்கிறார். அவர் இதற்கு முன்னதாக பூவா தலையா என்ற சீரியலில் இளமதி என்று ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாண்டியாக நடித்தவர் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து செவ்வந்தி அல்லது ஆனந்த ராகம் சீரியலுக்கு பதிலாக,  ஆடுகளம் என்ற தொலைக்காட்சி தொடரும் புதிதாக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.