சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியரில் நடித்துவரும் நடிகை சைத்ரா ரெட்டி, ஒரு நாளைக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை சம்பளம் பெறுவதாகவும், மற்ற சின்னத்திரை நடிகைகளை விட இவர் தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்டிவியின் சீரியல் என்றாலே தனிரசிர்கள் பட்டாளமே உள்ளது. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அவர்களுக்கேற்ற கதைக்களத்துடன் சீரியல்கள் தற்போது ஒளிப்பரப்பாகிவருகிறது. இதில் ஒன்று தான் கயல் சீரியல். கடந்த அக்டோபர் மாதம் முதல் ப்ரைம் டையமான இரவு 7.30 மணிக்கு கயல் என்ற புதிய சீரியல் ஒளிப்பரப்பட்டுவருகிறது.
இதில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமான சஞ்ஜூவ் மற்றும் ஜி தமிழில் யாராடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி இருவரும் ஜோடியாக நடித்துவருகின்றனர். சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏந்தி நிற்கும் சைத்ரா, விஜய் டிவியின் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியலில் தான் பிரபலமானார். ஸ்வேதாவாக அச்சீரியலில் வலம் வந்த சைத்ரா, இதன் பிறகு சன்டிவியின் கயல் சீரியல் தனது பயணத்தை தொடங்கி நடித்துவருகிறார்.
தந்தையை இழந்த குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்கும் பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளும், நிகழ்வுகளுமே கயல் தொடரின் கருவாகும். மேலும் தன்னுடைய தாய், சகோதரிகள், சகோதரர்கள் என அனைவருக்கும் உதவும் கரமாக உள்ளார் கயல். இந்த நிலை தான் பெரும்பாலான குடும்பங்களில் நிகழ்வதால் இச்சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும் கயல் நண்பராக எழில் கதாபாத்திரத்தில் வரும் சஞ்சீவ்வின் நட்பு, காதல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் தான் தொடர் ஆரம்பித்த முதல் மாதமே 10.66 புள்ளிகளுடன் ரேடிங்கில் முதலிடம் பிடித்தது.
இதனையடுத்து தொடர்ந்து இச்சீரியல் சில மாதங்களாகவே டிஆர்பியில் டாப் – 5 இடத்தைப் பிடித்து வருகிறது. தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் கயலாக வாழ்ந்துவரும் கயல், சம்பளமாக பெறும தொகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை சைத்ரா ரெட்டி நாள் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இச்சீரியலியே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர் தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த நடிகை சைத்ரா ரெட்டி, நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் லதா ரோலில் நடித்துள்ளார். இவர் சில காட்சிகளில் வந்திருந்தாலும் , அவரது நடிப்பிற்காக ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். இதோடு சீரியலில் நடித்துவருவதோடு,. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | Dhoni Jersey no 7: “மூடநம்பிக்கையில் நாட்டம் கிடையாது” - நம்பர் 7 தேர்வு செய்தது குறித்து தோனி ஷேரிங்ஸ்