சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு வந்த ஜீவானந்தம், குணசேகரன் மீது துப்பாக்கியால் குறி வைக்க  ஒருவர் மாற்றி ஒருவர் அங்கே வந்ததால் குறி தப்புகிறது. அப்போது அங்கே வெண்பா வந்து "அப்பா" என அழைக்கவும் துப்பாக்கியை உள்ளே வைத்து விட்டு வெண்பாவிடம் சென்று அவளுக்கு அடிபட்டதைப் பற்றி விசாரிக்கிறார். ஈஸ்வரி அங்கு வந்தும் கூட அவளுடன் பேசாமல் சென்று விடுகிறார்.




கெளதம் திருவிழா நடக்கும் இடத்துக்கு வந்து விடுகிறான். ஈஸ்வரியையும் வெண்பாவையும் காணவில்லையே என நந்தினி வருத்தபட்டு கொண்டு இருக்கிறாள். குணசேகரன் ஈஸ்வரி எங்கே எனக் கேட்க "அவங்க இன்னும் வரல " என சொல்கிறார்கள். பூசாரியிடம் சொல்லி பூஜையைத் தொடங்க சொல்கிறார் குணசேகரன். பூஜை தொடங்குவதற்குள் அனைவரும் இங்கே வந்தாக வேண்டும் என சொன்னதால் தர்ஷன் அவர்களைத் தேட செல்கிறான்.

ஈஸ்வரி ஜீவானந்தம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது வெண்பா ஈஸ்வரி அவளை நன்றாகப் பார்த்து கொண்டார் என சொல்கிறாள். அப்போது தர்ஷனும் தர்ஷினியும் அங்கே வருகிறார்கள். தர்ஷன் அவரை தர்ஷினியிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறான். தர்ஷினி வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி மனவேதனையுடன் பேசுகிறாள். அந்த வீட்டில் பெண்ணாக பிறந்ததை நினைத்து அவமானப்படுவதாக சொல்கிறாள். உங்களை நான் அப்பா எனக் கூப்பிடலாமா எனக் கேட்டு அப்பா என சொல்லி அவரின் தோள் மீது சாய்ந்து கொள்கிறாள் தர்ஷினி.




"நான் குணசேகரனைக் கொல்ல வேண்டும் என்று தான் இங்கே வந்தேன். ஆனால் எத்தனை பேரை அது பாதிக்கும் என எனக்கு புரிகிறது. அதனால் என்னுடைய நோக்கத்தை நான் கைவிடுகிறேன். ஒரு பேருக்காவது அப்பாவாக குணசேகரன் இருந்துட்டு போகட்டும். நான் அவரை விட்டுறேன்" என்கிறார்.  

கௌதம் குணசேகரன் மீது குறி வைக்கிறான். ஆனால் அதுவும் தப்பி விடுகிறது. தர்ஷன் வந்து அம்மாவுக்கு உடம்புக்கு முடியல அதனால் வரவில்லை என சொல்ல, அனைவரும் பூஜையில் கலந்து கொள்கிறார்கள். பூஜை முடிந்து குணசேகரன் வெளியில் வர ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியையும் பார்த்து விடுகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


குணசேகரன் வெண்பாவை அழைத்து பாசமாக பேசுகிறார். "வீட்டுக்கு போவோமா" என வெண்பாவிடம் கேட்க அவள் ஈஸ்வரியை அம்மா என அழைக்கிறாள். "அம்மாவா யாரு?" என குணசேகரன் கேட்க, "ஈஸ்வரி அம்மா" என வெண்பா சொன்னதும் "சரிதான்" என நக்கலாக சொல்கிறார் குணசேகரன்.

இரவு நந்தினி, ரேணுகா, சக்தி, ஜனனி, ஈஸ்வரி பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே ஜீவானந்தம் வருகிறார். நந்தினி அவரிடம் "இம்புட்டு நடந்ததுக்கு அப்புறமும் விட்டுடீங்களே சார்" எனக் கேட்க "குணசேகரன் என்னை இங்க விருந்தாளியா கூப்பிட்டு இருக்காருன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும். இது எல்லாம் தெரிஞ்சும் நான் இங்க வந்து இருக்கேனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு" என ஜீவானந்தம் சொன்னதும் அனைவரும் அதைக் கேட்டு அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.





அடுத்த நாள் அப்பத்தா நடத்தும் பங்ஷனுக்கு எல்லாரும் வந்து இருக்கிறார்கள். அப்போது சக்தி ஏதோ அவசர வேலையாக செல்ல அனைவரும் ஜனனியிடம் என்ன நடந்தது எனக் கேட்கிறார்கள். "முக்கியமான வேலையா போறாரு வந்துருவாரு" என்கிறாள் ஜனனி.


கோயிலில் சுட்டுத்தள்ள முடியாமல் போனதால் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு வருகிறான் கெளதம். சக்தி யாரையோ சென்று சந்திக்க செல்கிறான். அப்பத்தா ஜீவானந்தம் மற்றும் சில ஆபீஸர்கள் உடன் வருகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.