சன் டிவியில் மிகவும் பரபரப்பான கட்டத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர். இந்த வாரமாவது ஆதிரை திருமணம் அருணுடன் நடைபெறுமா? ஜனனி குணசேகரனுக்கு எதிரான இந்த காரியத்தில் வெற்றி பெற்று மூக்குடைப்பாளா என பல கேள்விகளுக்கு விடையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எதிர்நீச்சல் சீரியலின் அபிமான ரசிகர்கள். இந்த வாரமாவது இந்த திருமணம் நடைபெற்று முடியும் என மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 


 



அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் திருமணத்திற்கு முதல் நாள் இரவு நடைபெறும் நிகழ்வுகள் அமோகமாக நடைபெற்று வருகிறது. ஜான்சிராணி ஆதிரையிடம் ஒரு புடவையை கொண்டு வந்து கொடுத்து கட்டிக்கொண்டு வரச்சொல்ல வழக்கம் போல ஆதிரை கடுப்பாகி முடியாது என விதண்டாவாதம் செய்து வருகிறார். ஜான்சிராணி எவ்வளவு சொல்லியும் அது எதையுமே ஆதிரை காதில் வாங்கி கொள்ளவில்லை. அந்த நேரம் பார்த்து குணசேகரன் அங்கு வர அவருக்கே உரிய கர்வத்துடன் ஏன் இந்த புடவைய கட்டிக்கிட்டு வர மாட்டியா என மிரட்ட உடனே அருகில் இருந்த ஜனனி ரகசியமாக ஆதிரையிடம் நம்ம  காரியம் நல்ல படியா முடியும் வரையில் அமைதியாக தான் இறங்கிப்போக வேண்டும் என கூறுகிறாள். 


மறுபக்கம் தண்ணிய போட்டுக்கிட்டு ஒரே ஆட்டம் பாட்டம் தான். உறவினர்களுடன் கதிர், கல்யாண மாப்பிள்ளை கரிகாலன் அனைவரும் சேர்ந்துக்கிட்டு குத்தாட்டம் போட அவர்களுடன் சேர்ந்து ஜான்சி ராணியும் மேடையில் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்த குணசேகரன், தம்பி ஞானசேகரனிடம் என்னடா இது கொடும. என்னோட மானம் மரியாதை எல்லாம் இப்படி போகுதே என்ற கடுப்பில் ஜான்சி ராணியையும் கதிரையும் கூப்பிட அவர்கள் காதில் அது விழவே இல்லை. வேற வழியின்றி மேடையில் குணசேகரன் ஏற தம்பி ஞானசேகரன் அவரை தடுக்கிறார். நீங்க மேல ஏறினா உங்க மரியாதையும் போய்விடும் என கூறி தடுத்து விடுகிறார்.


குணசேகரன் உடனே அது தான் எல்லாத்தையும் வாங்கிட்டானுங்களே இனிமே என்ன போகப்போகுது என சலித்து கொள்கிறார். எல்லாம் நம்ம சம்பந்தி வீடு சரக்கு தான் என கூற குணசேகரன் திரும்ப திருப்ப அத சொல்லாதப்பா. கல்யாணம் முடியட்டும் இந்த ஜான்சி ராணிக்கு பணம் கொடுத்து இதை முடிக்க சொல்லலாம். இல்லன்னா என்னிக்காவது போலீசு கிட்ட  மாட்டிக்கிட்ட குணசேகரன் சம்பந்தி கள்ள சாராய வழக்கில் சிக்கிக்கொண்டார் என பேப்பர்ல போட்டு அசிங்கப்படுத்திடுவாங்க. 


 



பந்தி நடக்கும் இடத்தில் கரிகாலன் நான் ஆதிரையுடன் தான் சாப்பிட வேண்டுமென அடம் பிடிக்க ஜான்சி ராணி அதிரையை தரதரவென இழுத்து வருகிறார். கூடவே ஜனனியும் அந்த கூத்து நடக்கும் இடத்திற்கு வருகிறாள். ஹாஸ்பிடலில் இருந்து கல்யாண மண்டபத்துக்கு வரும் ரேணுகா போஸ்டர் பேனர் எல்லாத்தையும் பார்த்து புலம்பிக்கொண்டே நேராக நந்தினியையும் மாமியாரையும் பார்த்து விட்டு சமையலறை பக்கமாக வந்து விடுகிறார். இங்கே நடக்கிற கூத்தை பார்த்து நொந்துகொள்கிறார் மாமியார் விசாலாட்சி. எப்படியோ அவரை சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்கள் மருமகள்கள். 


சக்தி மறுபக்கம் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை கோயிலில் செய்து கொண்டு இருக்கிறன். பூஜை தேவையான பொருட்கள் வாங்க பணம் கொடுக்கிறான். திருமண மண்டபத்தில் குணசேகரனுக்கு மோர் கொண்டு போகும் ரேணுகாவிடம் என்ன ஒட்டு கேட்க வந்தியா? என கேட்க எனக்கு அதுக்கு எல்லாம் நேரமில்லை என நக்கலாக பதில்கொடுக்கிறார் ரேணுகா.


சக்தி எங்க காணோம்? என கேட்க, எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார் ரேணுகா. குணசேகரன் உடனே யாருமே சரியில்ல. நந்தினி எதிர்த்து எதிர்த்து பேசுது, உன் பொண்டாட்டி எல்லாத்துக்குமே ரியாக்ஷன்தான். அம்மாகிட்ட என்ன கேட்டாலும் உடனே அழுகுது. இவங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றாங்க. அதை எல்லாம் எப்படி முறியடிச்சு இந்த கல்யாணத்தை முடிக்கிறேன் பாரு என தம்பி ஞானசேகரனிடம் சவால் விடுகிறார் குணசேகரன்.