நேற்று முதல் சோஷியல் மீடியா அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே கூறலாம். ஆனால் கடந்த அரை மணி நேரமாக சோஷியல் மீடியா விஜய், சூர்யா ரசிகர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது. சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் போட்ட ஒரு பதிவு இந்த ட்ரெண்டுக்கு காரணம். 6PM என்ற பதிவு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. பீஸ்ட் பட அப்டேட் என்று விஜய் ரசிகர்களும், எதற்கும் துணிந்தவன் பட அப்டேட் என சூர்யா ரசிகர்களும் பதிவுகளை அள்ளித்தூவி வருகின்றனர். பீஸ்ட் இயக்குநர் நெல்சன் சன் பிக்சர்ஸ் ட்வீட்டை லைக் செய்துள்ளார். அதனால் இது பீஸ்ட் அப்டேட் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்