சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம்தான் அண்ணாத்தே. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் ரஜினிகாந்த் டிஸ்கஷனில் ஈடுபடும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் 'தலைவா' என்று ஆர்ப்பரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="fi" dir="ltr">Thalaivaa 💥💥🙏🏼 <a >https://t.co/zXBmw2IWKM</a></p>— karthik subbaraj (@karthiksubbaraj) <a >April 12, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
2019-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த, பிரபல இயக்குநர் சிவாவுடன் இணையவுள்ளார் என்று செய்திகள் பரவின. செய்தி வெளியான சில தினங்களில் அந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிசெய்தது. அண்ணாத்தே என்று பெயரிடப்பட்ட நிலையில், 2020-ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கான பணிகளை ஹைதராபாதில் தொடங்கினார் ரஜினிகாந்த்.
ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முடிந்த நிலையில் 7ம் தேதி தனி விமானம் மூலம் மீண்டும் படப்பிடிப்பு பணிகளை துவங்க ஹைதெராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.