பொன்னியின் செல்வன் 1 படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே போலியாக விமர்சனம் செய்த விமர்சகரையும் அவர் 3 ஸ்டார் கொடுத்த போலியான விமர்சனத்தையும் பகிர்ந்து அவரின் இந்த போலியான பதிவை அம்பலப்படுத்தியுள்ளார் நடிகை மற்றும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி. 


சுஹாசினியின் குற்றச்சாட்டு :


காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை குறித்து ஏராளமான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சகட்ட அளவில் இருந்த நிலையில் இன்று வெளியாகி திரை விமர்சகர்கள், ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து போலியான ஒரு விமர்சனத்தை திரைப்பட விமர்சகர் உமைர் சந்து இரண்டு தினங்களுக்கு முன்னரே ஒரு போலியான விமர்சனத்தை வெளியிட்டு 3 ஸ்டார் ரேட்டிங்கையும்  கொடுத்துள்ளார். இந்த விமர்சனத்தை சுஹாசினி அம்பலப்படுத்தியுள்ளார். 


 



திரைப்பட விமர்சகர் உமைர் சந்து


 


வெளிநாட்டு விமர்சகர் செய்த காரியம் :


ஹிந்தி மற்றும் தென்னிந்திய திரைப்படங்களை விமர்சனம் செய்யும் இந்த நபர் வெளிநாட்டு திரைப்பட விமர்சகர் ஆவார். இந்தியாவில் வெளியாகும் திரைப்படத்தை படத்தின் ரிலீசுக்கு முன்பே விமர்சனம் செய்வது அடிக்கடி கவனிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பத்திரிகையாளர்களுக்காக வெளியிடப்படும் காட்சிகளை பொறுத்து அவர் விமர்சனம் அளித்து வருகிறார் என நினைத்துள்ளனர் பார்வையாளர்கள். ஆனால் இது அப்படி பட்ட விமர்சனம் அல்ல என சாடியுள்ளார் சுஹாசினி. 


 


 



போலியான விமர்சனம் :


செப்டம்பர் 30ம் தேதியான இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 27ம் தேதியன்றே ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விமர்சனத்தை பகிர்ந்துள்ளார் உமைர் சந்து. அவர் எழுதிய விமர்சனத்தில் " முதல் விமர்சனம் #PS1 !அற்புதமான புரொடக்‌ஷன் டிசைனிங் மற்றும் VFX கொண்ட சினிமா சகா! # சீயான் விக்ரம் # கார்த்தி ஸ்டோல் தி ஷோ. # ஐஸ்வர்யா ராய் பச்சன் ரீ என்ட்ரியில் அசத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக பல திருப்பங்கள், கிளாப்ஸ்கள் மற்றும் அருமையான தருணங்கள் கொண்ட ஒரு சரித்திர திரைப்படம்" என விமர்சனம் அளித்து அதற்கு 3 ஸ்டார் ரேட்டிங்கும் கொடுத்துள்ளார் இந்த போலி வெளிநாட்டு விமர்சகர்.