வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் 31ம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின்  முதல் பாகம் மட்டுமே தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இப்படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். இளையராஜாவின் இசையில் உருவான இப்படத்தின் மேக்கிங் வீடியோ மக்களின் பாராட்டுகளை குவித்தது.   


 



கிளாப்ஸ்களை அள்ளிய சண்டை காட்சி: 


விடுதலை படத்தின் ஹைலைட்டான இருந்தது சண்டை காட்சிகள். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மிகவும் அற்புதமாக கோரியோகிராப் செய்து இருந்தார் ஸ்டண்ட் கோரியோகிராபர் பீட்டர் ஹெய்ன். விடுதலை படத்திற்கு இவரின் பங்களிப்பு மிக அதிகம். கொடைக்கானல் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த சண்டை காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. மிகவும் குறுகலான பாதைகளில் குடியிருப்புகள் நடுவே படமாக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து. 


விடுதலை ஷூட்டிங் பற்றி பீட்டர் ஹெய்ன்:


விடுதலை படத்தின் அனுபவம் குறித்தும், தனது திரைப்பயணம் பற்றியும் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் மனம் திறந்து பேசியிருந்தார் ஸ்டாண்ட் கோரியோகிராபர் பீட்டர் ஹெய்ன். மின்னலே திரைப்படத்தின் மூலம் ஸ்டாண்ட் மாஸ்டராக அறிமுகமானவர் அதனை தொடர்ந்து ஏராளமான தென்னிந்திய திரைப்படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  அவர் பேசுகையில் "இது வரையில் நான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த அனைத்து படத்திலேயும் எனது பெஸ்ட்டை மட்டுமே கொடுத்துள்ளேன். அந்த வகையில் விடுதலை படத்திலேயும் நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன். விடுதலை படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு நாள் மட்டுமே உடல்நிலை சரியில்லாமல் ஷூட்டிங் செல்ல முடியாமல் போனது” என்றார். 



மோசமடையும் உடல் நிலை :


தனது உடல் நிலை பற்றி பீட்டர் ஹெய்ன் கூறுகையில் "எனது உடல் முழுவதிலும் ஏராளமான ஸ்க்ரூக்கள் உள்ளன. அது நகர்வதை கூட உங்களால் பார்க்க முடியும். பெரும்பாலான எலும்புகள் தசைக்கு வெளியே தான் உள்ளன. அதே போலே எனது ஸ்கல் எலும்புகள் கூட வெளியே தெரியும். என் உடல் நிலை இப்படி மோசமான நிலையில் உள்ளது. இன்னும் நான் எத்தனை நாட்கள் இப்படி வாழ முடியும் என தெரியவில்லை. அதனால் உயிருடன் இருக்கும் கொஞ்ச காலம் வரை என் மனதுக்கு பிடித்ததை ரசித்து செய்து வாழ ஆசை படுகிறேன். 



ரிஸ்க் எல்லாம் ரஸ்க் :


சினிமாவில் நான் நுழையும் போது என் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தார்கள். சினிமாவிற்காக நான் என்ன எல்லாம் செய்தேன் என்பதை சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஏனென்றால் சினிமா தான் எனக்கு எல்லாமே. உயரமான இடத்தில் இருந்து குதித்துள்ளேன், பல ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்துள்ளேன், முதல்வன் படத்திற்காக ஒட்டு துணி இல்லாமல் உடலில் தீயோடு குதிப்பது போல நடித்திருந்தேன். இப்படி ரிஸ்க் எடுத்த நான் இந்த அனாதையாக இருக்கிறேன். 


மெய்சிலிர்க்க வைத்த ரசிகர்கள் அன்பு :


ரசிகர்களின் அன்பு எனக்கு ஆனந்தத்தை கொடுக்கிறது. ஒரு முறை வெளிநாடு செல்வதற்காக ஏர்போர்ட் சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் வந்து என்னை கட்டியணைத்து கொண்டு நலம் விசாரித்தார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. ஒரு பொது இடத்தில் இப்படி செய்கிறாரே என் நினைத்தேன். அப்போது அந்த ரசிகர் அவர் கையில் பீட்டர் ஹெய்ன் என என்னுடைய பெயரை டாட்டூ போட்டிருப்பதை காண்பித்ததும் நான் ஷாக்காகிவிட்டேன். இது போல நல்ல மனம் கொண்ட ரசிகர்களை பார்க்கும் போது தான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றார் பீட்டர் ஹெய்ன்