ஆர்.ஆர்.ஆர் படத்தின் இராண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு இயக்குநர் ராஜமெளலி பதில் அளித்திருக்கிறார். 


எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜீனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம்  ‘ஆர்.ஆர்.ஆர்’. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், உலக அளவில் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  அண்மையில் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. 


இந்த நிலையில் இந்தப்படத்தின் இராண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி, அந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய தந்தைதான் என்னுடைய எல்லா படங்களுக்கும் கதை ஆசிரியர். நாங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இராண்டாம் பாகத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்தோம். அவர் அந்தக்கதையை உருவாக்கும் பணியில் இருக்கிறார். ” என்று பேசியிருக்கிறார். 


 






மேலும் அந்த பாகத்தில் ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இருப்பார்களாக என்பது குறித்து பேசிய போது, “ அதை ஆற விடுங்கள்.  அது நடந்தால் நிச்சயம் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அது பாக்ஸ் ஆஃபிசில் என்ன மாதிரியான விளைவை கொடுக்கும் என்பதற்காக அல்ல. என்னுடைய சகோதரர்களுடன் செலவிட அதிக நேரம் கிடைக்கும் என்பதற்காக. ஆனால், அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.  


 






பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு  உருவாகி இருந்தது. படத்தில்  ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருடன்  ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.