ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, ரானா டகுபதி, அனுஷ்கா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்த பாகுபலி திரைப்படம் (இரண்டு பாகங்கள் இணைக்கப்பட்டு) பாகுபலி தி எபிக் என கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ரீரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாகுபதில் தி எபிக் ரீரிலீஸ்
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் , தமன்னா , ரானா டகுபதி , அனுஷ்கா , நாசர் , ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ் ஆகியோ நடிப்பில் உருவான படம் பாகுபலி. சரித்திர கற்பனை கதையாக உருவான இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஹாலிவுட்டில் வெளியாகும் வரலாற்றுப் படங்களை பார்த்து வியந்து வந்த இந்திய ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமாக பாகுபலி படம் அமைந்தது. இமாலைய பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமான கதையும் கற்பனையை வைத்து உலகத்தரமான படத்தை உருவாக்கி காட்டினார் ராஜமெளலி. பாகுபலி முதல் பாகமும் சரி இரண்டாவது பாகமும் வசூல் சரி வசூல் ரீதையாக உலகளவில் சாதனைப் படைத்தன.
கடந்த ஜூலை மாதத்தோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்தது பாகுபலி திரைப்படம். இதனைக் கொண்டாடும் விதமாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி பாகுபலி 1 மற்றும் 2 இரு பாகங்களும் 3 மணி 40 நிமிட நேர படமாக வெளியானது. சில காட்சிகளை நீக்கியும் சில புதிய காட்சிகளை இணைத்தும் இந்த முறை படத்தை வெளியிட்டுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த அதே வரவேற்பை இந்த முறையும் கொடுத்துள்ளார்கள். இதுவரை உலகளவில் ரூ 1800 கோடி செய்த இப்படம் ரீரிலீஸிலும் வசூலை குவித்து வருகிறது
பாகுபலி ரீரிலீஸ் வசூல்
உலகளவில் 1150 திரையரங்குகளில் பாகுபலி தி எபிக் படம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தமிழ் , இந்தி , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியது. முதல் நாளில் இப்படம் உலகளவில் ரூ 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரீரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூல் ஈட்டி பாகுபலி தி எபிக் படம் சாதனை படைத்துள்ளது.
ராஜமெளலி மகேஷ் பாபு கூட்டணி
அடுத்தபடியாக ராஜமெளளி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். பிரியங்கா சோப்ரா , பிருத்விராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 1000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் சாகச கதையாக இப்படம் உருவாகி வருகிறது.