சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' என்ற பிரபலமான தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. அதன் தொடர்ச்சியாக வாணி ராணி, கல்யாணப் பரிசு, பாரதி கண்ணம்மா என ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள ஸ்ருதி கடந்த ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரவிந்த் சேகர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் சின்னத்திரை உலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்ருதியின் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் தள்ளியது. இந்தப் பெரும் கவலையில் இருந்து மீண்டும் வரும் ஸ்ருதி, தன் காதல் கணவரின் இழப்புக்குப் பிறகு அவருடன் தன் நினைவுகளை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.


 



அந்த வகையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் பிறந்தநாளான நேற்று, தன் கணவருடனுடன் எடுத்து கொண்ட அழகான வீடியோக்களை ஒரு தொகுப்பாக அமைத்து அதற்கு பின்னணியில் தனது சொந்த குரலில் ஒரு பாடலை பதிவு செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். மேலும் அதனுடன் மிகவும் நீண்ட குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி சண்முகப்பிரியா. 


"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பான அரவிந்த். உங்களின் பிறந்தநாளுக்கு என்னுடைய ஸ்பெஷல் டெடிகேஷன்! நானே இந்தப் பாடலைப் பாடி, பதிவு செய்தேன், அதனால் இன்று அவருடைய மிக அழகான நினைவுகளுடன் இதை போஸ்ட் செய்ய முடிவு செய்தேன். 


ஆனால் இந்தப் பாடலை முன்பு பதிவு செய்தபோது, இந்ப்த பாடல் வரிகள் இப்போது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு இவ்வளவு தொடர்பு பெறும் என்று எனக்குத் தெரியாது. மிகவும் துரதிர்ஷ்டவசமானது, 


நான் சமீபத்தில் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்ட ஒரு சிறிய செய்தியை உங்கள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். இது நிச்சயமாக என்னை பலப்படுத்தப்போகிறது, ஆனால் இது உங்கள் அனைவருக்கும் உண்மையை நினைவூட்டும் என்று நம்புகிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது, நிச்சயமற்றது மற்றும் கணிக்க முடியாதது. 


 ஈகோ, பொறாமை, எதிர்மறை உணர்வுகள் என நீங்கள் வெறுப்பைக் காட்டலாம். ஆனால் இதை நீங்கள் உணரும் நேரத்தில் அது மிகவும் தாமதமாகிவிடும். எனவே, இந்த குறுகிய வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்தையும் அன்பு, மகிழ்ச்சி, பாசிட்டிவிட்டி, மக்களை மேம்படுத்துதல் மற்றும் முடிந்த போதெல்லாம் புன்னகையுடன் மகிழ்ச்சியை பரப்புதல் ஆகியவற்றுடன் மதிப்பு மிக்கதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குங்கள். ஒரு நாளின் முடிவில், மகிழ்ச்சியான மற்றும் அழகான நினைவுகள் மட்டுமே உங்களைத் தொடர வைக்கும்! 


எனவே ஒவ்வொரு தருணத்தையும் போற்றுங்கள்! மேலும் உங்கள் பிரார்த்தனைகளால் என்னுடைய கார்டியன் ஏஞ்சலை ஆசீர்வாதம் செய்யுங்கள்..." எனப் பதிவிட்டுள்ளார்.


 






ஸ்ருதியின் இந்த உருக்கமான போஸ்டுக்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் மூலம் ஆறுதலும், தைரியத்தையும் கொடுத்து வருகின்றனர்.