கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ் காட்சிகள், பிரம்மாண்ட காட்சிகள், தெறிக்கும் வசனங்கள் என பார்ப்போரை சீட்டின் நுனியில் அமர வைத்த திரைப்படம் கேஜிஃஎஒ. முதல் பாகத்தில் மாபெரும் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காக்க வைத்துள்ளது.
படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் அறிவித்தது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேஜிஎஃப் வெளியாகி 3 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 3 Years Of KGF Chapter 1 என்ற பெயரில் வெளியான இந்த வீடியோவில் கேஜிஎஃப் முதல் பாகம் உருவாக்கம் குறித்தும், ரசிகர்கள் இடையே அது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் படக்குழு பேசுகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்து கேஜிஎப் ரசிகர்கள் இரண்டாம் பாகத்துக்காக காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்