சூரி 


விடுதலைப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வி. எஸ் . வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரவலான கவனம் பெற்றுள்ளது.


இத்துடன் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவை தவிர்த்து சூரி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் கருடன்


கருடன்






எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. வெற்றிமாறன் இப்படத்துக்கு கதை எழுதும் நிலையில், இப்படத்துக்கு இது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.


யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைக்கிறார். கருடன் படம் வரும் மே மாதம் 31-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நட்பு , விஸ்வாசம் , பகை என பக்கா ரூரல் சப்ஜெட்டாக உருவாகியிருக்கும் கருடன் படம் சூரியின்  நடிப்பு கரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் . இதே 2024 ஆம் ஆண்டிற்குள்ளா சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய இரு படங்களுக்கு வெளியாக இருப்பதால் இந்த ஆண்டு சூரிக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் 


சசிகுமார் குறித்து சூரி


இப்படத்தில் பல வருடங்கள் கழித்து நடிகர் சசிகுமார் உடன் இணைந்து நடிக்கிறார் சூரி. சினிமாவில் கனவோடு அலைந்து திரிந்த தனக்கு வாய்ப்பளித்தது சசிகுமார்தான்.. என்னைப் போன்றவர்களும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தியது சசிகுமார் மற்றும் சமுத்திரகனி தான் என்று சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய சூரி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது .




மேலும் படிக்க : Kingdom of the Planet of the Apes Review: சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்.. விமர்சனம் இதோ..!