ஆண்குழந்தையை பெற்றெடுத்த நடிகை சோனம் கபூர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 


 






பிரபல பாலிவுட் நடிகரான அனில் கபூர் மற்றும் சுனிதா கபூர் தம்பதியின் மகள்தான் நடிகை சோனம் கபூர். கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சஞ்சய் லீலா பன்சாலியின் ’சாவரியா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து டெல்லி 6,  ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், பாக் மில்கா பாக், நீர்ஜா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், 2013ஆம் ஆண்டு தனுஷூடன் நடித்த ராஞ்சனா படத்தில் நடித்தார். இந்தப்படம் தமிழில்  ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது. இதனிடையே கடந்த   2018ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆனார். 
திருமணத்துக்குப் பிறகும் சஞ்சு, ஜோயா ஃபேக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த சோனம் கபூர் கடந்த மார்ச் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 


 


அந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த நடிகை சோனம் கபூர் தனது மகனுக்கு வாயு என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார். மேலும் அவர் பதிவிட்டு இருந்த பதிவில்  “ எங்கள் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தை சுவாசித்த சக்தியின் ஆன்மா... அபாரமான தைரியத்தையும், ஹனுமான் மற்றும் பீம் ஆத்மாவின் வலிமை..புனிதமான எங்களுடையது ஆகிய அனைத்தின் ஆன்மாவிலும்  நாங்கள் எங்கள் மகன் வாயு கபூர் அஹுஜாவுக்கு ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்.” என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் ஏன் வாயு என பெயர் வைத்தோம் என்பதற்கான காரணத்தையும் அவர் பதிவிட்டு இருந்தார். 



சோனம் கபூர் கூறிய பெயர்காரணம் :






”இந்து வேதங்களில் வாயு என்பது ஐந்து தத்துவங்களில் ஒன்றாகும். வாயு சுவாசத்திற்கான கடவுள், ஹனுமான், பீம் மற்றும் மாதவ் ஆகியோரின் ஆன்மீக தந்தை மற்றும் அவர் காற்றின் நம்பமுடியாத சக்தி வாய்ந்த இறைவன். பிராணம் என்பது வாயு, பிரபஞ்சத்தின் வாழ்க்கை மற்றும்  அறிவுக்கான வழிகாட்டும் சக்தி. பிராணன், இந்திரன், சிவன் மற்றும் காளியின் அனைத்து தெய்வங்களும் வாயுவுடன் தொடர்புடையவை. தீமைகளை அழித்து சுவாசிக்க செய்ய முடியும். வாயுவை வீரனாகக் கூறுவார்கள். அதோடு தைரியமான மற்றும் வசீகரிக்கும் அழகன் என்பார்கள்.” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சோனம் கபூர் குழந்தை பிறந்த 60 நாட்களுக்கு பிறகு அவர் மீண்டும் ஜிம்மிற்குள் சென்று உடற்பயிற்சியை தொடங்கி இருக்கிறார். இது சம்பந்தமாக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.