பாலிவுட் பிரபல நடிகை சோனம் கபூர். இவர் கடந்த ஆண்டு ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சமீப காலமாக அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. திரை நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் முதல் குழந்தை மீதான சில செய்தி ஊடகங்களுக்கு அலாதி ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் ஆகியோர் பற்றியும் அவர்களது முதல் கர்ப்பம் பற்றியும் இப்படித்தான் பல்வேறு வதந்திகள் வந்து சென்றன. அப்புறம் அவர்களே ஒரு நாள் பேபி பம்ப் என்று சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டவுடன் அமைதி தானாக வந்துவிடும். அண்மையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் இது நேர்ந்தது.
இந்த வரிசையில் தற்போது, சோனம் கபூர் இழுத்துவிடப்பட்டுள்ளார். ஆனால், அவரோ மிக வெளிப்படையாக தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதோ எனது பீரியட்ஸ் முதல் நாளுக்காக இஞ்சி டீ, கூடவே சுடு தண்ணீர் எனப் பதிவிட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதைவிடத் தெளிவாக யாரும் கூற முடியாது என்றளவுக்கு அனைவரின் வாய்களையும் அவர் அடைத்துள்ளார். சோனம் கடந்த சில மாதங்களாக அவரது கணவர் ஆனந்துடன் லண்டனில் இருந்தார். கொரோனா ஊரடங்கால் லண்டனிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவரும் அங்கேயே தங்கினர். அடிக்கடி அவர் சமூகவலைதளங்களில் ஊரடங்கு மொமன்ட்ஸ் ஃபோட்டோக்களை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். அங்கிருந்து வோக் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியில், இங்கு கிடைக்கும் சுதந்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நானே எனது உணவை தயாரிக்கிறேன். நானே எனது வீட்டை சுத்தம் செய்கிறேன். எனக்குத் தேவையான மளிகைப் பொருட்களை நானே சென்று ஷாப்பிங் செய்து வருகிறேன். ஊரடங்கு நாட்களில் வீட்டில் தயார் செய்த இரவு உணவை உண்ண நானும் என் கணவரும் வெளியில் டின்னருக்கு செல்வது போல் அலங்காரம் செய்து ஆயத்தமாவோம். அது போன்ற சிற்சில சந்தோஷங்கள் இருந்தன என்று கூறியிருந்தார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சோனம் கபூர் க்ளாஸ்கோ, ஸ்காட்லாந்து சென்றார். அங்கு அவர் நடிக்கும் ப்ளைண்ட் ( Blind) திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்தப் படம் கொரிய படத்தின் ரீமேக். இதில் சோனம் கபூருடன் வினய் பதக், பூரப் கோலி, லிலெட் துபே ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் கபூர் நடிப்பில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தி ஜோயா ஃபேக்டர் (The Zoya Factor) என்ற திரைப்படம் வெளியானது. இதில் அவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் அனில் கபூர், அனுராக் காஷ்யப் கூட்டணியில் உருவான ஏகே vs ஏகே (AK vs AK) படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் இணைந்தார். ஏகே vs ஏகே (AK vs AK) நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.