தமிழ் திரையுலகில் 1995ஆம் ஆண்டு முதல் பாடி வருபவர் பாடகி ஹரிணி. இவர் அஜித்,விஜய்,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார். இவரின் டூயட் பாடல்கள் பல ஹிட் அடித்து வெற்றி பெற்றுள்ளன. இந்திரா திரைப்படத்தில் நிழா காய்கிறது என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். அதன்பின்னர் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார். இவ்வாறு ஹரிணியின் குரலில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. நிழா காய்கிறது:
ஏஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்திரா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய 15 வயதில் ஹரிணி இந்தப் பாடலை பாடியிருந்தார்.
"இந்த பூமியே பூவனம்உங்கள் பூக்களை தேடுங்கள்இந்த வாழ்க்கையே சீதனம்உந்தன் தேவையை கேளுங்கள்
நிலா காய்கிறதுநேரம் தேய்கிறதுயாரும் ரசிக்கவில்லையே…இந்த கண்கள் மட்டும்உன்னை காணும்..."
2. டெலிபோன் மணிபோல்:
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன்-2. இப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இதை ஹரிணி மற்றும் ஹரிஹரன் பாடியிருப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார்.
"நீயில்லை என்றால்வெயிலும் அடிக்காது துளிமழையும் இருக்காதுநீயில்லை என்றால் சந்திரன்இருக்காது ஒரு சம்பவம்எனக்கேது..."
3. மனம் விரும்புதே:
நேருக்கு நேர் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு தேவா இசையமைத்திருப்பார். இந்த பாடல் வரிகளும் ஹரிணியின் குரலும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"புயல் வந்து போனதொரு வனமாய்ஆனதடா என்னுள்ளம்என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்என் நிலைமை அது சொல்லும்.."
4. இவன் யாரோ:
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் திரைப்படம் மின்னலே. இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்தது. அதில் இந்தப் பாடலும் ஒன்று. ஹரிணியின் குரலில் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் சிறப்பாக அமைந்திருக்கும்.
"இவன் யாரோ இவன்யாரோ வந்தது எதற்காகசிாிக்கின்றான் ரசிக்கின்றான்எனக்கே எனக்காக என்னாச்சுஎனக்கே தொியவில்லை என்மூச்சின் காய்ச்சல் குறையவில்லை..."
5. மூங்கில் தோட்டம்:
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஹரிணி குரலில் அமைந்த மற்றொரு வெற்றி பாடல் இது. கடல் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. அபேய் ஜோத்புர்கருடன் இணைந்து ஹரிணி இப்பாடலை பாடியிருப்பார். பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"இது போதும் எனக்குஇது போதுமேவேறேன்ன வேணும் நீ போதுமேஇது போதும் எனக்குஇது போதுமேவேறேன்ன வேணும் நீ போதுமே..."
இவை தவிர ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி, வாராயோ தோழி, சோனியா சோனியா போன்ற பல வெற்றி பாடல்களை ஹரிணி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:எல்லாமே சூப்பர் சாங்ஸ்.. இரவு நேரத்தை சிறப்பாக்கும் மோகன் ப்ளே லிஸ்ட் !