ராஜ்கமல் ப்ரொடக்‌ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பூஜை விழா வீடியோ வெளியாகியுள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான ’ப்ரின்ஸ்’ திரைப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், தான் அடுத்தடுத்து நடித்து வரும் திரைப்படங்களான மாவீரன், அயலான் ஆகிய படங்களை  வெற்றிப் படங்களாக மாற்றும் வகையில்  சிவகார்த்திகேயன் தற்போது முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில், சிவகார்த்தியேன் தன் 21ஆவது படத்துக்காக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்த தகவல் முன்னதாக வெளியானது.


சிவகார்த்தியேனின் 21ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.


தேசிங்கு பெரியசாமி இயக்க, நடிகர் சிலம்பரசன் நடிக்கும் மற்றொரு படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றொருபுறம் தயாரிக்கும் அறிவிப்புகளும் முன்னதாக வெளியாகின.


இந்நிலையில், சிவகார்த்திகேயன் - ராஜ் கமல் ப்ரொடக்‌ஷன்ஸ் இணையும் திரைப்படத்தின் பூஜை வீடியோ இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.


சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் நடிகர் கமல்ஹாசனும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.


 






இந்த வீடியோ சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகிவருகிறது.


நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் சிவகார்த்திகேயன் இணைவதாக சென்ற ஆண்டே தகவல் வெளியானது. மேலும் நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தில் இணைவதாக கடந்த மே 9ஆம் தேதி அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.


மறுபுறம் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படம் முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்படும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின.


இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கும் நிலையில், நடிகை சரிதா, நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. பரத் ஷங்கர் இந்தப் படத்துக்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Radhika on Manobala : பல தசாப்தங்களாக தொடர்ந்த நட்பு... மனோபாலா இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ராதிகா உருக்கமான ட்வீட் !