ஜின் பட இயக்குநர் சர்ச்சை


 நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின்' பெட்' திரைப்படம் நேற்று மே 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா தன்னை இரண்டு வருடம் அலையவிட்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வைத்தார்.  

Continues below advertisement


எஸ்.ஜே சூர்யா மீது குற்றச்சாட்டு


நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டு வருட காலம் ஐந்து முறை சேர்ந்து இந்த கதையில் நிறைய மாற்றங்கள் செய்தோம். ஒவ்வொரு முறை அவர் கதையில் மாற்றங்கள் செய்தபோதும் நான் சமரசம் செய்துகொண்டேன். இதற்கிடையில் அந்த நடிகரின் பெரிய படம் ஒன்று வெளியானது. அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நம் படத்தை தொடங்கிவிடலாம் என நான் தயாரிப்பாளரை அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்க ஹோட்டலுக்கு சென்றேன். ஆனால் இந்த முறை அந்த நடிகரின் உடல்மொழி தொடங்கி பேச்சுவார்த்தை எல்லாமே மாறியிருந்தது. என்னிடம் மீண்டும் கதை சொல்ல சொன்னார். சில காட்சிகளை நடித்து காட்ட சொன்னார். நடித்து காட்டினே. கடைசியில் உனக்கு சினிமா தெரியல. நீ அன்ஃபிட் என்று சொல்லிவிட்டார். தயாரிப்பாளரும் கைவிட்டு என் அறைக்கு அழுதுகொண்டே வீடு போய் சேர்ந்தேன். அன்று முடிவு செய்தேன் இந்த படத்தை நானே தயாரித்து இயக்க வேண்டும் எனறு" என டி.ஆர் பாலா தெரிவித்தார். 


எஸ்.ஜே சூர்யா வெளியிட்ட ஸ்கிரின்ஷாட்


எஸ்.ஜே சூர்யாவின் பெயர் இந்த சர்ச்சையில் இடம்பெற்றதும் எஸ்.ஜே சூர்யா சார்பாக ஸ்கிரின் ஷாட் ஒன்று வெளியானது. அதில் ஜின் படத்தின் இயக்குநர் எஸ் ஜே சூர்யாவை வந்து சந்திப்பதாக கூறியுள்ளார். எஸ் ஜே சூர்யா ' உங்கள் கதை எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எனக்கு பிடிக்கவில்லை. அது நன்றாக இல்லாமல் படம் எடுப்பது சாத்தியமில்லை. நீங்கள் இந்த படத்திற்கு வேறு நடிகரை பார்த்துக் கொள்ளுங்கள்" என எஸ் ஜே சூர்யா பதில் தெரிவித்துள்ளார்


மேலும் நடிகர் ஆர்.எஸ் கார்த்திக் ஜின் படத்தின் இயக்குநர் இதற்கு முன்னதாக 46 என்கிற படம் எடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.