விஜய் டிவியின் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக மேடையேறிய ஒரு கலைஞன் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
கமல் தயாரிப்பில் சிவா :
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் சமீபத்தில் தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஏ.கே. முருகதாஸுடன் கூட்டணி :
அதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. இப்படத்தில் நடிகர் மோகன் லால், பிஜு மேனன், வித்யுத் ஜம்வல் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளராக சிவா :
ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் அருவி, டாக்டர், கனா, டான் உள்ளிட்ட நல்ல நல்ல படங்களாக தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சூரி நடித்து வரும் கொட்டுக்காளி மற்றும் இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' படத்தை தயாரித்துள்ளார். ராசி அழகப்பன் எழுதிய சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒன் சைட் லவ் :
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் உங்களை பத்தி யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்திக்கேயன் தன்னுடைய காதல் அனுபவம் பற்றி பகிர்ந்து இருந்தார். ஒன் சைட் லவ் ஒன்று இருந்தது. ஆனால் அது கொஞ்ச நாளிலேயே போய்விட்டது. அந்த பொண்ணு வேற ஒருத்தரோட கமிட்டாகிட்டாங்க. என்னோட வாழ்க்கையில இருந்த ஒரே லவ் அதுதான். அந்த பொண்ணை நான் டிவியில இருக்கும் போது ஒரு தடவை சிட்டி சென்டரில் பார்த்தேன். ஆனா நான் பேசவில்லை. இளையராஜா சாரோட பாட்டு மட்டும் மனசுக்குள்ள கேட்டுச்சு. அப்படியே போயிட்டேன். ஆனா அவ லவ் பண்ணுன பையன் இப்போ இருந்த பையன் இல்லை. அப்பாடி அவனுக்கும் கிடைக்கல என நினைச்சுக்கிட்டே போயிட்டேன்” என தன்னுடைய ஒரே காதல் பற்றி பகிர்ந்து இருந்தார் சிவகார்த்திகேயன்.