சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பிப்ரவரி 17 ஆம் தேதி தனது 40 ஆவது வயதை எட்டினார். ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்தன. விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞனாக தொடங்கி இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். காமெடியன் , சப்போர்டிங் ரோல் என தனது கரியரில் பல சவால்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு இவ்வளவு பெரிய நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். கவின் , ரியோ என பல இளம் நடிகர்கள் அவரது பாதையில் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு இன்று பயணித்து வருகிறார்கள். 

கேக் வெட்டி கொண்டாடிய பராசக்தி படக்குழு

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். ரவி மோகன் , அதர்வா , ஶ்ரீலீலா இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது கல்லூரி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று செட்டில் கேட் வெட்டி கொண்டாடியது படக்குழு. மேலும் படத்தின் இயக்குநர் உட்பட நடிகர்கள் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் பிரியாணி பரிமாறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மதராஸி

சிவகார்த்திகேயன் நடித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வித்யுத் ஜம்வால் , ருக்மினி வசந்த் , பிஜூ மேனன் , விக்ராந்த் , ஷபீர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.அனிருத் இசையமைத்துள்ளார்.