இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
நடிகர் சிவகார்த்திகேயன் தனது இளைய மகன் பவன் பிறந்தநாளில் சேயோன் படக்குழுவினருக்கு பிரியானி விருந்தளித்து கொண்டாடியுள்ளார்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தையாக மகன் பிறந்தது. தனது மகனுக்கு பவன் என்று சிவகார்த்திகேயன் பெயர் வைத்தார். கடந்த ஜூன் 2 ஆம் தேதியோடு பவன் இரண்டு வயதை எட்டியுள்ளார். சேயோன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தனது மகனின் பிறந்தநாளை படக்குழுவினரோடு கொண்டாடியுள்ளார். தனது மகன் பிறந்த நாளில் சேயோன் படக்குழுவினருக்கு பிரியானி விருந்தளித்து சிறப்பாக கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன் .
சிவகார்த்திகேயன் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பாக்யஶ்ரீ போர்ஸ் படத்தில் நாயகியாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மதுரையை மையமாக வைத்து கிராமத்து கமர்சியல் திரைப்படமாக சேயோன் உருவாகி வருகிறது.
மகன் பவன் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்கிற பெண் குழந்தையும் குகன் என்கிற ஆண் குழந்தையும் இருந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு பவன் என்று எஸ் கே பெயர் சூட்டியுள்ளார். கடந்த ஜூன் 2 ஆம் தேதியோடு பவன் இரண்டு வயதை எட்டியுள்ளார். தனது மகனின் பிறந்தநாளை சிவகார்த்திகேயன் சேயோன் படப்பிடிப்பு தளத்தில் வைத்து கொண்டாடினார். மதுரை உசிலம்பட்டில் உள்ள பதினெட்டாம்படி கருப்பனசாமி கோயிலுக்கு தனது மனைவியோடு எஸ் கே சென்றுள்ளார். கனவன் மனைவி இருவரும் 5 அடி உயர அரிவாள் சாற்றி சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சேயோன் படக்குழுவினர் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பான பிரியானி விருந்து கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















