அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி படமாக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் ஆக்‌ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயனை மிளிசச் செய்ததா என்பதை இந்த ட்விட்டர் விமர்சனத் தொகுப்பில் பார்க்கலாம்

Continues below advertisement

அமரன் பட ட்விட்டர் விமர்சனம்

அமரன் பட முதல் பாகம் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. படத்தின் கதை ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும் உணர்ச்சிகளும் திரைக்கதையும் சரியாக கையாளப்பட்டிருப்பதாக அமரன் படம் புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது. சுவாரஸ்யமான காட்சியமைப்புகள் மற்றும் ஜி.வி யின் சூப்பரான பின்னணி இசை சேர்ந்து கூஸ்பம்ப்ஸ் தருணங்களாக அமைகின்றன என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதல் பாதி முழுவதும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இடையிலான காதல் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. சொல்ல வந்த கருத்தை தெளிவாக இயக்குநர் சொல்லியிருப்பது படத்தின் ஒரு பெரிய பிளஸ் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.