அமரன்


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன் . வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அமரன் படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே ‘ பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ள இப்பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். 


மேஜர் முகுந்த் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ்


மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி அமரன படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாக நடித்துள்ள நிலையில் முகுந்த் மனைவி இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். ஒரு பக்கம் மேஜர் முகுந்தின் ராணுவ வாழ்க்கையையும் இன்னொரு பக்கம் முகுந்த் மற்றும் இந்து இடையிலான அழகான காதல் வாழ்க்கையையும் இப்படம் திரைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம். 






மேஜர் முகுந்த் வீர மரணம் அடைந்தபின் அவர் சார்பாக அசோக சக்கரா விருதினை அவரது மனைவி இந்து பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பெற்று தனது வீட்டிற்கு திரும்பி போகையில் தனது கணவர் முகுந்தைப் பற்றிய அவரது நினைவுகளே படமாக சொல்லப்பட்டிருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டீகோட் செய்துள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இப்படம்  ரசிகர்களை நிச்சயம் எமோஷனலாக்கும் என்பதை உறுதியாக கூற முடியும்.