நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் பராசக்தி படம் உருவாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான 100வது படமாகும். இப்படியான சிறப்புகளைக் கொண்ட பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பராசக்தி டிரெய்லர் வெளியீடு

இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக நடக்கும் காட்சிகள் இடம்பெற்று, பார்க்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரின் கதாபாத்திரங்கள் என்னவென்று காட்டப்பட்டுள்ளது. ஜனநாயகன் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் இன்று பராசக்தி டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது.

முன்னதாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 14 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 3ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

Continues below advertisement