மெரினா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது அவர் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். 

Continues below advertisement

முடிவடைந்த பராசக்தி படப்பிடிப்பு:

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய அப்டேட்டை படக்குழு  அளித்துள்ளது. 

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான டாவ்ன் பிக்சர்ஸ் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் அதர்வா, சிவகார்த்திகேயன். ஜெயம்ரவி 3 பேரும் ஒன்றாக நடந்து வருகின்றனர். 

Continues below advertisement

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்:

தமிழ் சினிமாவின் புரட்சிகரமான படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி படம். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி வசனத்தில் உருவாகிய அந்த படத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே மூட நம்பிக்கை, கடவுள் பெயரை கூறி ஏமாற்றுபவர்கள் ஆகியோரை விளாசும் வசனங்கள் இடம்பெற்றிருக்கும். 

இதன் காரணமாகவே, இந்த படத்திற்கு பராசக்தி என்று பெயர் சூட்டப்பட்டது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ஆகும். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராளியான தமிழ் மொழி ஆர்வலர் தாளமுத்து நடராசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதைக்களமும் 1970 காலகட்டங்களில் நடப்பது போலவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகனுடன் மோதல்:

சூரரைப் போற்று படத்தை இவர் இந்தியில் சர்ஃபியா என்ற பெயரில் இயக்கினார். ஆனால், அந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் பொங்கல் வெளியீடாக உலகெங்கும் வெளியாக உள்ளது. 

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வரும் தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள விஜய் தனது கடைசி படமான ஜனநாயகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளார். 

எதிர்பார்ப்பு:

இந்த சூழலில், அவருக்கு போட்டியாக தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பராசக்தியும் வெளியாக உள்ளது. இதனால், இந்த இரு படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா, அப்பாஸ், ராணா, பாசில் ஜோசப் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.