அமரன் வெற்றி விழா
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமரன் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையைப் பற்றி உருக்கமாஅக் பேசினார்
அப்பாவைப் பற்றி சிவகார்த்திகேயன்
" இந்த படத்தை சரியாக பண்ணி முடிக்க வேண்டும் என்று நினைத்ததற்கு காரணம் என் தந்தைதான். சிறைத் துறையில் அப்பாவைப் பற்றி கேட்டார் தெரியும். என் அப்பா ஒரு நாள் லீவு எடுத்து நான் பார்த்தது இல்லை. மேஜர் முகுந்திற்கும் என் அப்பாவிற்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கு. மேஜர் முகுந்த் போலவே என் அப்பா லீவுக்கு வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தார். அடுத்த நாள் காலேஜ் முடித்து வீட்டிற்கு சென்றபோது கூட்டமாக இருந்தது. என் அப்பா இறந்தது தெரிந்தது. சங்கு எல்லாம் முடிந்து என் அப்பாவின் நொறுங்கிய எலும்புகளைப் பார்த்தேன். அன்று நொறுங்கியது எலும்பு மட்டும் இல்லை 17 வயது பையனின் இதயமும்தான். அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த உடைந்து போன எலும்புகளை ஒட்டிவைத்து என் அம்மாவையும் அக்காவையும் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன். இன்று அமரன் படத்தைப் பார்த்து முதலமைச்சர் துணை முதலமைச்சர் எல்லாம் பாராட்டுகிறார்கள். நீங்க எல்லாரும் பாராட்டினீர்கள். நீங்கள் எல்லாரும் சேர்ந்து நொறுங்கிப்போன என்னை ஒட்டி வைத்து இந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறீர்கள். இன்று நான் இங்கே சிவகார்த்திகேயனாக நிற்கவில்லை.ஜி தாஸ் என்கிற ஒரு சின்சியரான போலீஸ் ஆஃபிஸரின் மகனாக நிற்கிறேன்.
ஏன் அப்பாவைப் பற்றி பேசினால் அழுதுவிடுகிறேன் என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அந்த வலி இன்னமும் என்னை விட்டு போகவில்லை. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். என் அப்பாவாக தான் அவர்களை பார்க்கிறார்கள். இந்த படத்தில் இந்து மாதிரி தான் என் அம்மா. அவருக்கு அவ்வளவு தைரியம் இல்லை. அவர் வெறும் 8 ஆவத் தான் படித்திருந்தார். என் அப்பாவுக்கு ஜனாதிபதி கையில் விருது கொடுத்தார்கள். என் அம்மாதான் அதை பெற்றுக்கொண்டார். நான் அதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். இந்த படமும் என் படமும் சேம் லைஃப்.
என் அப்பாவைப் பற்றி ஒரு பையோபிக் எடுக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் என் அப்பாவைப் பற்றி பேச நான் இந்த இடத்தில் இருக்கிறேன். அதுவே எனக்கு போதும். என் அப்பா எங்கேயும் போகல . இந்த கைதட்டல்களுக்கு மத்தியில் தான் அவர் இருக்கிறார்.