90 களில் குழந்தைகளின் மனம் கவர்ந்த நாயகனாக திகழ்ந்த ஹீமேன் மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார். ஹாலிவுட்டில் உருவாகியுள்ள ஹீமேன் மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ் திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்தி , தமிழ் , மலையாளம் , தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. தமிழில் இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் டப்பிங் பேசவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது தமிழில் வெற்றிகரமான தயாரிப்பாளரும் கூட. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அண்மையில் வெளியான தாய்கிழவி திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இதே படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது . பாக்யஶ்ரீ போர்ஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பால சரவணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் அடுத்தடுத்த் இணைய இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.  சேயோன் படத்தின் படப்பிடிப்பு நேற்று மே 19 ஆம் தேதி மதுரையில் துவங்கியது.  முதற்கட்ட படப்பிடிப்பு 28 நாட்கள் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது

Continues below advertisement

ஹீமேன் தமிழ் டப்பிங் பேசும் சிவகார்த்திகேயன் 

நடிப்பு ஒருப்பகம் இருக்க சிவகார்த்திகேயன் வேறு சித விதங்களிலும் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் சென்னை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிஎஸ்கே அணி சார்பாக பிரத்யேக நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். அண்மையில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் முருகனைப் பற்றிய ஒரு பக்திப்  பாடலை அவர் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகும் ஹீமேன் படத்திற்கு சிவகார்த்திகேயன் தமிழில் டப்பிங் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருந்தார். இது மார்வெல் ரசிகரகளிடையே பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. தற்போது ஹீமேன் படத்தில் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசியிருப்பது ரசிகரகளிடம் என்ன மாதிரியான வரவேற்பைப் பெறும் என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஹீமேன் படக்குழு விபரம் 

ஹீமேன் மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ் திரைப்படத்தை டிராவிஸ் நைட் இயக்கியுள்ளார்.  அமேசான் மற்றும்  எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் இப்படத்தை விநியோகித்துள்ளது. முக்கிய கதாபாத்திரம் ஹீ-மேனாக நிக்கோலஸ் காலிட்சைன் நடித்துள்ளார்.   ஜாரெட் லெட்டோ, கமீலா மெண்டஸ்  இட்ரிஸ் எல்பா ஆகியோர் அடங்கிய நட்சத்திரப் பட்டாளம் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.