இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ருக்மணி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜூமேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கஜினி மற்றும் துப்பாக்கி படமும் சேர்ந்த கலவையில் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருப்பதால், சிவகார்த்திகேயன் கரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

மதராஸி ரசிகர்களை கவர்ந்ததா?

தமிழ்நாட்டில் மொத்தம் 62.22 சதவீத தியேட்டர்களில் இப்படம் வெளியானது. தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் ரசிகர்களை 'மதராஸி' ஈர்த்த போதிலும், கர்காடக ரசிகர்களை கவரவில்லை. மும்பை, டெல்லியில் இப்படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 3 நாட்கள் விடுமுறை என்பதால் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

முதல் நாள் வசூல் நிலவரம்

தமிழ்நாட்டில் மட்டும் மதராஸி திரைப்படம் 12.8 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தை விட மிக மோசமான வசூல்தான் என திரை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு ஒரு தரமான கம்பேக் படம் என்றே நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.  இப்படம் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு பக்கா ட்ரீட் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement