அமரன்


சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் திரையரங்கில் 30 நாட்களுக்கும் மேலாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படத்தின் இயக்குநர் , நடிகர் , நடிகை ஆகிய மூவரும் விஜய் டிவியில் இருந்து தங்கள் கரியரை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  ராஜ்குமார் பெரியசாமி  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநராக பணியாற்றியவர் . சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக. சாய் பல்லவி நீங்களும் ஆகலாம் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர். தற்போது அமரன் படத்தின் இணைந்த மூன்று பேரும் தங்களது தனித்துவத்தால் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறார்கள். 


தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம் அமரன். மேஜர் முகுந்தின் வீர மரணம் பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவருக்கும் மனைவி இந்து இடையிலான காதல் நாம் அறியாதது. அமரன் படத்தில் சண்டைக் காட்சிகளைக் காட்டிலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது இந்து மற்றும் முகுந்த் இடையிலான காதல் காட்சிகள் தான். 


அமரன் பாக்ஸ் ஆபிஸ்


அமரன் படத்தில் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனை கெளரவித்துள்ளது ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம். அமரன் படத்தின் டீசர் வெளியானபோது இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் செட் ஆவாரா என்கிற சந்தேகத்தை பலர் வெளிப்படுத்தி இருந்தார்கள். அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் மேஜர் முகுந்தாக திரையில் அசத்தினார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் சாதனை படைத்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ 300 கோடிக்கும் மேலாக படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அமரன் ஓடிடி ரிலீஸ்


அமரன் திரைப்படம் கங்குவா ரிலீஸூக்கு முன்பாக ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தத். ஆனால் படத்திற்கு மக்கள் மத்தியில் தொடர் வரவேற்பு இருந்ததால் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது . தற்போது வரும் டிசம்பர் 5 ஆம் தேதி அமரன் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதே நாளில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படமும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. முன்னதாக அமரன் படம் திரையரங்கில் தொடர்ந்ததால் கங்குவா படத்திற்காக வரவேற்பு குறைந்தது. அதேபோல் தற்போது புஷ்பா 2 படத்திற்கு வரவேற்பு குறையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது