தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னை குடும்பநல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுஒருபுறம் இருக்க, ரவி மோகன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Continues below advertisement

இதில், இருவரும் ஒரே கலரில் உடை அணிந்திருந்தனர். மேலும், ரவி மோகன் கெனிஷாவின் கையை பிடித்து அழைத்து வந்ததோடு, இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியது. இத்தனை ஆண்டுகளாக எந்த சர்ச்சையிலும் சிக்காத அன்பான பாசக்கார கணவான வாழ்ந்து வந்த ரவி மோகன் இப்படி செய்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

Continues below advertisement

ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஆர்த்தி அறிக்கைஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கெனிஷா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். 

இந்த நிலையில் தான் ரவி மோகன் மற்றும் கெனிஷா உறவு குறித்து சர்ச்சைக்கு பெயர் போன பிரபல பாடகி சுசீத்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த உலகத்தில் யாருமே செய்யாத தப்பையா ரவி மோகன் செய்துவிட்டார். தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் கமுக்கமா செஞ்சிகிட்டு இருப்பதை இவர் வெளிப்படையா செய்யிறாரு. மற்றவர்கள் செய்வது யாருக்குமே தெரிவதில்லை. எல்லா பெண்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். ரவி மோகன் அந்த பெண்ணிற்கு அந்தளவிற்கு அங்கீகாரம் கொடுக்கிறார்.

ஆர்த்தியைப் பற்றி தெரியாமலே நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். இத்தனை ஆண்டுகாலமாக அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருந்துள்ளது. ஆர்த்தியின் இன்ஸ்டா புகைப்படம் மற்றும் வீடியோக்களை தவிர்த்து அவரைப் பற்றி உங்களுக்கு வேறு எதுவும் தெரியாது.

 கெனிஷா என்ன யாருமே அணியாத உடைகளையா அணிந்திருக்கிறார். இசை நிகழ்ச்சிகளில் ஆண்ட்ரியா அணியும் உடைகளைப் போன்று தான் இவரும் உடை அணிந்திருக்கிறார். கெனிஷாவின் தொழிலைப் பற்றி பேசுவதற்கு இந்த உலகத்தில் யாருக்கும் தகுதி இல்லை. ஜெயம் ரவி என்ற பெயரில் உள்ள ஜெயம் என்பதை நீக்கியது குறித்து சுசீத்ரா தனது இன்ஸ்டா வீடியோவில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ கெனிஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாகத்தான் கெனிஷாவிற்கு ஆதரவாக இப்போது சுசீத்ரா குரல் கொடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.