சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத இடமாக பார்க்கப்படுகிறது திரை உலகம். வெளியில் நடக்கும் தவறுகளை விட திரை உலகில் நடக்கும் தவறுகள் அதிக அளவில் கவனிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே, இது பற்றிய தகவல்களும் பூதாகரமாகின்றன. அந்த வகையில் தான் தற்போது போதைப் பொருள் விவகாரமும் பரபரப்பின் உச்சத்தை எட்டி இருக்கிறது .

Continues below advertisement

ஏற்கனவே பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த, ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், உள்ளிட்ட சில பிரபலங்கள் போதை வழக்கில் சிக்கி உள்ளனர். அதே போல் சமீபத்தில் டோலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபல பாடகி மற்றும் மலையாள திரை உலகை சேர்ந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ போன்ற பிரபலங்கள் அடுத்தடுத்து போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது தமிழ் திரையுலகமும் போதை கலாச்சாரத்தில் சிக்கி சீரழிவதாக கூறப்படுகிறது .

Continues below advertisement

கடந்த சில வருடங்களுக்கு முன்பே இது பற்றிய தகவல்களை பாடகி சுசித்ரா பேசி வந்த நிலையில்... அப்போது அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. சுசித்ரா தான் போதையில் உளறி வருவதாக விமர்சனங்கள் பரந்தன. ஆனால் நடிகர் ஸ்ரீகாந்தின் கைதுக்கு பின்னர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திரை மறைவில் நடக்கும் போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் மற்றும் போதை பொருள் டீலிங் குறித்த தோண்ட துவங்கி உள்ளனர். இது சம்பந்தமாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது .

புது டீலர் ஒருவரும் சிக்கி உள்ளதால், போதை பொருள் நெட்வொர்க்கும் பெரிதாக இருக்கும் என போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. அதே போல் இது தொடர்பாக 10 பிரபலங்கள் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் இருப்பதாகவும், அவர்களிடம் கூடிய விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவர்கள் யார் யார் என்பதை இதுவரை போலீசார் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்.

இவர்களின் கைது குறித்தும், போதை கலாச்சாரம் குறித்தும் பிரபல யூட்யூப் சேனலில் பேசியுள்ள சுசித்ரா போதை பொருளை ஒரு நடிகை வாண்டடாக கொடுத்ததும், அதை தவிர்த்த இரண்டு நடிகர்கள் பற்றி பேசியுள்ளார். அதாவது பாலிவுட் திரை உலகில் இருந்து கோலிவுட் பக்கம் வரும் சிலர்தான் அங்கிருந்த போதை கலாச்சாரத்தை இங்கும் பரப்பி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்த சுசித்ரா, நடிகை மனிஷா கொய்ராலா தன்னுடன் நடித்த நடிகர் அரவிந்த்சாமி மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு போதை பொருள் உபயோகப்படுத்த கொக்கி போட்டதாகவும், அவர்கள் ஆணித்தனமாக போதையை பயன்படுத்த மறுத்து விட்டதாக கூறி உள்ளர். அதில் ஒரு நடிகர் அவரை அடிக்க பாய்ந்ததாகவும் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மனிஷா கொய்ராலா தான், இயக்குனர் மணிரத்னத்திற்கு போதைப்பொருள் பழக்கத்தை ஏற்படுத்தியது என்றும், அவருடைய முன்னாள் காதலரே ஒரு டீலராக இருந்தவர் என்றும் கூறியுள்ளார். மணிரத்னம் போதை பொருள் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அவர்கள் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை என கேள்விப்பட்டதாகவும்... நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடல் படத்தில் பணியாற்றினார்கள் எனும் குறிப்பிட்டு பேசியுள்ளார் சுசித்ரா.