கொரோனா காலத்துல நான் என்ன செய்தேன் தெரியுமா? என்று பாடகியும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மனைவியுமான சைந்தவி என்று மனம் திறந்து பேட்டியளித்தார்.


கோலிவுட்டில் மெல்லிசையான ஒரு தம்பதிகள் என்றால் அது ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவிதான். நான் ஏன் மெல்லிசை என்கிறேன் என்றால் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய  டூயட் பாடல்களை கண்களை மூடிக்கொண்டு கேட்கலாம். பள்ளி பருவத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்த நேரத்தில் வெளியான பாடல்தான் பிறை தேடும் இறவிலே உயிரே... 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாறுபட்ட நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பிடித்திருந்தது. அத்தனை ஆறுதலான பாடல் ! ஆறுதலான ஹஸ்கியான இனிமையான குரலுக்கு சொந்தக்காரியான சைந்தவி அளித்துள்ள பேட்டியிலிருந்து...


2 ஆண்டுகள் கொரோனா தொற்று காலம் என் மகளைப் பார்த்துக் கொள்வதிலேயே பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. இப்போ கொரோனா நெருக்கடி முடிந்ததால் அடுத்தது என்ன மாதிரியான தொழில் முன்னேற்றம் வரும் என்று காத்திருக்கிறேன். இப்போ நிறைய பிரபல இசையமைப்பாளர்களுக்கும் பாடியிருக்கிறேன். புதிய இசையமைப்பாளர்களுக்கும் பாடி இருக்கிறேன்.




என்னென்ன பாடல்கள் என்று இப்போதே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடும். ஆகையால் அதை விவரமாக சொல்லவில்லை. முதலில் நான் விழிகளில் பாடியபோது எல்லோரும் அதே மாதிரியான ஹஸ்கியான பாடல்களாகக் கொடுத்தனர். அதன் பின்னர் எள்ளுவய பாடல் ஹிட் ஆன நிலையில் இப்போதெல்லாம் அதுபோன்ற பாடல்களையே அதிகம் என்னிடம் கேட்கின்றனர். இதெல்லாம் ஒரு சீசன் மாதிரி. என்னை நிரந்தர ஒப்பாரி பாடகியாக்கி விடுவாங்களோ என்றுகூட நான் அஞ்சினார்கள்.


எள்ளுவய பூக்கலையே மட்டுமல்ல கையில ஆகாசம் என எல்லா பாடல்களுமே செம்ம ஹிட். என் மகளை நான் சுமந்த காலத்தில் இருந்தபோது நான் பாடிய பாடல்கள் எல்லாமே செம்ம ஹிட் தான். ஆகையால் எனக்கு அன்வி (மகளின் பெயர்) ஒரு லக்கி சார்ம்.
அனுயிக்கு சோக பாடல்கள் என்றாலே அவ்வளவு இஷ்டம் இல்லை. அவளுக்கு ரைம்ஸ் தான் ரொம்ம இஷ்டம். என் மகளுக்கு டேடி ஃபிங்கர் பாடலை அடிக்கடி பாடுவேன். அவளுக்கு அது பிடிக்கும். நோ மோர் ஜம்பிங் ஆன் தி பெட் பாடலும் பிடிக்கும்.


என்னால் மறக்க முடியாத தருணம்:


என்னால் மறக்க முடியாத தருணம் என்றால் என் மகளை ஈன்ற தருணம் தான். எனக்கு சிசேரியன் முறையில் தான் குழந்தை பிறந்தது. குழந்தை அழுகை சத்தம் கேட்டவுடன் டாக்டர் இசைக் குடும்பத்தில் இன்னொரு வாரிசு என்றார். எனக்கு அது ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ள ஆவல். நான் ஆசையுடன் கேட்க, ஜிவி என்னிடம் குழந்தை முகத்தைக் காட்டினார். டாக்டர் பெண் குழந்தை என்றார். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.


என்னுடைய முதல் சம்பாத்தியம் மேடைப் பாடல். நான் பாடிய முதல் பாடலுக்கு எனக்கு ரூ.150 சம்பளமாக கிடைத்தது. எனது முதல் கார் போலோ வோக்ஸ்வேகன். எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இலங்கைக்கு சென்றதே. எனது உயரம் 4 அடி 11 இன்ச்.


இவ்வாறாக சைந்தவி தனது சுவாரஸ்ய பேட்டியில் கூறினார்.