தனது உடை குறித்து கருத்து தெரிவித்த இணையவாசிகளுக்கு பிரபல பாடகி பூஜா வைத்தியநாத் கடுமையான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். 


விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னணி பாடகியான பூஜா வைத்தியநாத் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம் பெற்ற “பார்க்காத பார்க்காத”,  புலி படத்தில் இடம் பெற்ற “ஜிங்கிலியா”, தலைவா படத்தில் இடம்பெற்ற “தலைவா தலைவா”, மெர்சலில் இடம் பெற்ற “ஆளப்போறான் தமிழன்”, தெலுங்கு வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற “மல்லிப்பூ” பாடல் ஆகியவற்றை பாடி ரசிகர்களிடத்தில் புகழ்பெற்றார். 






இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷ் ஆக உடையணிந்து பாடல்களை பாடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனைப் பார்த்த சிலர் அந்த ஆடைகள் எல்லாம் உங்களுக்கு செட் ஆகவில்லை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்து கடுப்பான பூஜா வைத்தியநாத் காட்டமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் இப்போதெல்லாம் நான் கொஞ்சம் சருமத்தைக் காட்டும் ஆடைகளை அணிந்திருக்கும் கதை/படத்தை பதிவிடும் போதெல்லாம், நான் எப்படி உடை அணிய வேண்டும் என்பது குறித்து எனக்கு நிறைய கமென்ட்கள் வருகின்றன. அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். முதலாவதாக  நான் என் விருப்பத்திற்கும் வசதிக்கும் என் ஆடைகளை உடுத்திக்கொள்கிறேன், யாரையும் அனைவரையும் மகிழ்விப்பதற்காக அல்ல.






இரண்டாவதாக நான் ஆடைகளை அணிந்திருக்கும் போது இத்தகைய கமெண்ட்கள் வெளியாகும் என்ற பயத்தில் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்த்து விட்டேன். ஆனால் காலப்போக்கில், அதைப் பற்றி கவலைப்படாமல் நான் விரும்புவதை பதிவிட முடிவு செய்துள்ளேன்.இப்படி உடை அணிவது தவறு, எனக்குப் பொருந்தாது, எனக்கு ஒரு குறிப்பிட்ட இமேஜ் இருக்கிறது, அதை நான் பராமரிக்க வேண்டும், போன்றவற்றைப் பராமரிக்க வேண்டும் என கூறுபவர்களே, “என் உடல், என் உடைகள், என் வாழ்க்கை. அனைவரையும் மகிழ்விப்பதற்காக நான் இங்கு வரவில்லை, எனது பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயங்காமல் பின்தொடர வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.