ஜோனிதா காந்தி

பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தி சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் ஆபாசமாக எடிட் செய்து பகிரப்படுவது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். பொதுவாக தான் இன்ஸ்டாகிராமின் தனிப்பட்ட மெசேஜ்களை பார்ப்பதில்லை என்றாலும் யார் தன்னை டேக் செய்திருக்கிறார்கள் என்பதை வழக்கமாக பார்ப்பதாகவும் அப்படி பார்க்கையில் யாரோ ஒருவர் தனது ஆண் உறுப்பையும் தனது புகைப்படங்களை வைத்து எடிட் செய்து தன்னை டேக் செய்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இதையெல்லாம் செய்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் நிறைய பேரை ப்ளாக் செய்திருக்கிறேன். இதைப் பற்றி எல்லாம் நான் பெரிதாக கவலைக் கொள்வதில்லை. ஆனால் என்னுடைய அம்மாவிற்காக நான் இதை எல்லாம் தவிர்க்க நினைக்கிறேன். அவர் இதை எல்லாம் பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவார் என ஜோனிதா காந்தி தெரிவித்துள்ளார். 

யார் இந்த ஜோனிதா காந்தி

புது டெல்லியை பிறப்பிடமாக கொண்ட ஜொனிடா காந்தி, பின்னாளில் கனடாவில் குடியேறினார். சுகாதார அறிவியல் மற்றும் வணிகத்தில் பட்டப்படிப்பு முடித்த ஜொனிடாவுக்கு சிறுவயதில் இருந்தே பாடுவதிலேயே ஆர்வம். பல்வேறு பாடல்களை பாடி இணையத்தில் பதிவிட்டு வந்த ஜொனிடா காந்தி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடியதின் மூலம் இந்திய திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானுடன் கைகோர்த்த ஜோனிடா காந்தி இந்தி கோச்சடையான், ஓ காதல் கண்மணி, 24, காற்று வெளியிடை உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.

அந்த வகையில் இவர் பாடிய  ‘மெண்டல் மனதில்'  'மெய் நிகரா’,  ‘அழகியே’ உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும்  எகிடுதகிடு ஹிட் ரகம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியில் முக்கியப்பாடகியாக வலம் ஜோனிடா, அனிருத் இசையில் பாடிய  ‘செல்லம்மா’,  ‘அரபிக்குத்து’ போன்ற பாடல்கள் உலக அளவில் ஹிட் அடித்து ட்ரெண்டிங் பாடலாக அமைந்திருக்கின்றன. 2022 ஆம் ஆண்டு சர்வதேச அரசியல் கலை இதழான ரோலிங் ஸ்டோன் இதழ் ஜோனிதா காந்தியை கெளரவித்து தங்கள் இதழின் அட்டை படத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டது.