பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி அனிருத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இளைஞர்களை கவர்ந்த இளம் பாடகியாகவும் இருக்கும் அவர், தனது வாழ்வில் நடந்த மிக கசப்பான அனுபவங்களை தற்போது பகிர்ந்துள்ளார். தனக்கு பாலியல் ரீதியாக பலர் தொல்லை தந்திருப்பதாகவும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

பாடகி ஜோனிடா காந்தி

டெல்லியில் பிறந்த ஜோனிடா காந்தி, கனடா நாட்டில் வசித்து வருகிறார். இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார். இப்படத்தில் இவர் பாடிய "மனம் மனம் மெண்டல் மனமே" நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜோனிடா காந்தி பாடியுள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், டாக்டர், டான் போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி ரசிகர்களின் மனதை ஈர்த்தது.  இந்நிலையில், விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் "walking talking strawberry ice cream" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ஜோனிடா காந்தி அறிமுகமாகிறார். 

இளைஞர்களை கவர்ந்த பாடகி

ஜோனிடா காந்தி லைவ் கான்சர்ட்களிலும் கலந்துகொண்டு வைப் மோடை கிரியேட் செய்வார். நடனம் ஆடிக்கொண்டே பாடல்களை பாடி ரசிக்க வைத்து விடுவார். பாடகி, நடிகை, மாடலிங் என பன்முகத்திறமை கொண்ட அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதில், அவர் பாடும் பாடல்களையும் வெளியிடுவார். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது கனவு போல் இருந்ததாக தெரிவித்திருந்தார். அதேபோன்று சமீபத்தில் ஜோெனிடா காந்தி அளித்த பேட்டி ஒன்றில் தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து மிக வெளிப்படையாக பேசியுள்ளார். 

பாலியல் சீண்டல்

ஒரு ஆண் நபர் தனது அந்தரங்கப் பகுதியைப் பகிர்ந்து அதற்கு பின் எனது போட்டோவை வைத்திருந்தான். ரொம்ப ஆபாசமான அந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுமாதிரியான அசிங்கம் பிடி்தத நபர்களை நான் பிளாக் செய்து விடுவேன். இதுபோன்ற சம்பவத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  யார் மீதும் வழக்குத் தொடரவில்லை. ஆனால், இதுவும் ஒரு விதமான பாலியல் சீண்டல்தான். இதுபோன்று பலர் எனக்கு தினமும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என ஜோனிடா காந்தி தெரிவித்துள்ளார்.