விக்னேஷ் சிவனை வெளுத்த சின்மயி
மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கடந்த ஆண்டு கைது செய்யபட்டார் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஜானி மாஸ்டரை புகழ்ந்து நயன்தாராவின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஒருத்தை கொண்டாடுவதாக சின்மயி விக்னேஷ் சிவனை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சின்மயி பதிவு
விக்னேஷ் சிவன் தற்போது இயக்கிவரும் எல்.ஐ.கே படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜானி மாஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன் " எல்.ஐ.கே டீம் உங்களையும் உங்கள் வைபையும் நேசிக்கிறது " மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் ஜாமினில் வெளிவந்துள்ளார் ஜானி மாஸ்டர். இந்த மாதிரி திறமனையான குற்றவாளிகளை தான் நாம் தொடர்ந்து ப்ரோமோட் செய்து அவர்களை அதிகாரத்தில் உட்கார வைக்கிறோம். இந்த மாதிரியான செயலால் தான் அந்த குற்றவாளி தன்னை ஏதுவும் செய்யமுடியாது என பாதிக்கப்பட்ட பெண்கள் முன் கர்வமாக சுற்றுகிறான். ஸ்வீட் ' என சின்மயி விக்னேஷ் சிவனை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
ஜானி மாஸ்டர் பாலியல் வழக்கு பின்னணி
உடன் பணிபுரிந்த துணை நடன இயக்குநர் பெண் அளித்த புகாரில் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூர் போலீஸால் கைது செய்யப்பட்டார் ஜானி மாஸ்டர். தான் மைனாராக இருந்தபோது படப்பிடிப்பிற்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்த பெண் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் 376, 506 மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைதான ஒரு மாதத்திற்கு பின் இடைக்கால ஜாமினில் வெளிவந்தார் ஜானி மாஸர்.