பிரபல பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
என்னிடம் ஆதாரம் இருக்கிறது:
என்னை தடை விதித்தது டப்பிங் சங்கத்தில் வைரமுத்துவை நான் மட்டும்தான் சொன்னேனா? என்னோடு சேர்ந்து பல பெண்கள் சொன்னார்கள். 3 பேரும் வீடியோ காலில் சொன்னோம். அவர்களுக்கு இருந்த ஆதரவு அனைத்து தரப்பிடமும் இருந்தது. வைரமுத்து என்கிட்ட சமரசம் பேசுன ஆதாரம் இருக்கிறது.
எதுவும் தப்பு பண்ணலனா எதுக்கு சமரசம் பேசனும்னு அவரு கால் பண்ணனும்? சமரசம் என்றால் என்ன திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கேட்டேன். மன்னிச்சுடுங்க. நான் கால் பண்ணிருக்க கூடாது என்றார்.
என்ன சொன்னார்?
ஒருத்தர் மூலமா போன் பண்ணாரு. அவரு கால் பண்ணாரு நாம பேசி சமரசம் போயிடலாம். இதுக்கு மேல மீதி பெண்களின் கதை எல்லாம் சொல்ல வேண்டாம்னு சொல்லுனு சொன்னதாக சொன்னார். இதை நான் ஏற்கனவே சொல்லிருக்கேன். ஸ்டூடியோவுல அவரு வர்றதுக்கு முன்னாடி நான் பாடிடுவேன். இல்லாவிட்டால் அவர் வந்த பிறகு நான் போவேன். இதை நான் இசையமைப்பாளரிடம் சொல்லி பேசி வைச்சுட்டு போயிட்றது. அவரு எனக்கு வரிகளை விளக்க வேண்டும் என்று அவசியமில்லை. எனக்கு பார்த்து படித்தாலே புரியும்.
என்னை தடை விதிச்ச பிறகு பயங்கரமாக கஷ்டப்பட்டு இருக்கேன். என் கணவர், நண்பர்கள் உறுதுணையா இருந்தனர். நான் நடத்திக்கொண்டிருந்த ஸ்கின் கேர் கம்பெனியில என்னை ஏமாத்தி அதுலயும் நான் நடுத்தெருவுல நின்னேன். அனைத்து நெருக்கடியையும் கடந்து வந்தேன். எனக்கு இன்னமும் தெலுங்கு, கன்னடம், மலையாளத்துலயும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
ராதாரவி கூறியது உண்மையா?
டப்பிங் யூனியன்ல கலர், கலரா உறுப்பினர் அட்டை இருக்கிறது என்பது அவர்கள் கூறிதான் தெரிய வந்தது. ராதாரவி என்ன வேண்டுமானாலும் சொல்லுவார். அவருக்கா வாழ்வாதாரம் போகிறது? எல்லார் சம்பளத்துல இருந்தும் 10 சதவீதம் கமிஷன் வாங்கிக்கொண்டு அவங்க யூனியன் நடத்துறாங்க. சிலரை கவுரவ உறுப்பினர்களாக சேர்த்துவிட்டு அவர்களே சந்தா கட்டுவார்கள். ஆனால், 700 ரூபாய்க்கும், 800 ரூபாய்க்கும் சிலர் டப்பிங் பேசிவிட்டு அவர்களிடம் இருந்தும் 10 சதவீதம் கமிஷன் வாங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாடகி சின்மயி பாடாலாசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது திரையுலகம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது தமிழ் பிரபலங்கள் பலர் மீதும் மீ டூ இயக்கத்தின் கீழ் பாலியல் குற்றச்சாட்டுகளை பிரபலங்கள் பலரும் முன்வைத்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டு அவர் தமிழில் பாடவில்லை. சமீபத்தில் தக்ஃலைப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் சின்மயி பாடியது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. மேலும், அவரை மீண்டும் பாட வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை ரசிகர்கள் வலுவாக முன்வைத்தனர்.