மீடூ விவகாரம் திரைத்துறையில் மிகவும் அதிக அளவிலான பாதிக்கப்பட்டவர்களால்  பகிரப்பட்டு வந்த சமயத்தில் 2018 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி மீடூ புகார் அளித்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 'தொழில்முறைக்கு புறம்பானது' என கூறி சின்மயியை தனது தொழிலில் தொடர்ந்து பணிபுரிய தடை விதித்தது. இதற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தனர். 


 



 


நினைவு கூர்ந்த சின்மயி :


மீ டூ விவகாரத்தில் பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்ததில் ஒருவர் நடிகை சமந்தா. பொதுவாக சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு டப்பிங் கொடுப்பது சின்மயி என்பதால் அவர்களுக்கு இடையில் நல்ல நட்பும் இருந்து வந்தது. நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் ஆதரவு தெரிவித்ததை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார் பாடகி சின்மயி. "பொதுவாகவே நடிகைகள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பெண்கள் சந்திக்கும் பல்வேறு தடைகளையும் தாண்டி வந்ததில் ஒருவரான சமந்தா இந்த மீ டூ விவகாரத்தில் எனக்கு ஆதரவாக நின்றார்.  என்னை முழுமையாக நம்பி எனக்கு வேலையையும் கொடுத்தார்" என சமந்தாவை பற்றி நினைவு கூர்ந்தார் பாடகி சின்மயி.   


சமந்தாவின் ட்வீட் :


2010 ம் ஆண்டு அறிமுகமான முதல் படத்தில் இருந்து சின்மயியுடன் நெருங்கிய தோழியாக இருந்த வந்த நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கம் மூலம் " சின்மயி மற்றும் அவரின் கணவர் ராகுல் இருவரையும் 10 ஆண்டுகளாக அறிவேன். அவர்கள் இருவருமே நேர்மையான மனிதர்கள். உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே " என பதிவிட்டு இருந்தார் நடிகை சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. 


சின்மயிக்கு ஆதரவு :


அந்த சமயத்தில் நடிகை சமந்தா நடித்த 'ஓ பேபி' படத்திற்கு சின்மயி டப்பிங் பேசியிருந்தார். இது குறித்து சமந்தா சின்மயியை பாராட்டினார். என்னுடைய நடிப்பை சின்மயி தனது குரலால் மெருகேற்றிவிட்டார். அவர் மிகவும் திறமையானவர், தைரியமானவர், மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். மனதில் தப்பு என பட்டால் அதை வெளிப்படையாக பேசும் தைரியம் பெண்களுக்கு வர வேண்டும். அவரை நினைத்து பெருமையடைகிறேன். மற்ற பெண்களும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவருக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும்" என  நடிகை சமந்தா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.