ஹிந்தியில் 16வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் பிரபல பாடகர் அப்து ரோஷிக் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். பாடகர் அப்து சகபோட்டியாளரும், நடிகையுமான நிம்ரித் அஹுல்வாலியாவின் பிறந்தநாளையொட்டி, அவரது உடலில் "ஹாப்பி பர்த்டே நிம்ஸ்" என லிப்ஸ்டிக்கால் எழுதி நிம்ரித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ‌. அப்துவின் இந்த செயலுக்கு நிம்ரித்தை கவர்ந்துள்ளது.


இதைத்தொடர்ந்து அவரது முதுகுப் பகுதியில் 'ஐ லவ் தட்டி' என்று எழுதியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தட்டி என்றால் ஹிந்தியில் கழிவறை என்று பொருள்.






19 வயதான பாடகர் தஜிகிஸ்தானில் பிறந்தவர் மற்றும் கடந்த இரண்டு வருடங்களாக ஏ.ஆர்.ரஹ்மான், பிரெஞ்ச் மொன்டானா, வில் ஐ ஏஎம் மற்றும் ரெடோன் உள்ளிட்ட மிகவும் புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து பாடியுள்ளார். அப்துவின் ஆரம்பப் புகழ் உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட மாஸ்கோவில் நடந்த குத்துச்சண்டை செய்தியாளர் கூட்டம் மூலம் கிடைத்தது.


ஐந்து வயதில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு மற்றும் ரிக்கெட்ஸ் கண்டறியப்பட்டதால், அப்து வளரவில்லை. அவரது டீனேஜ் பருவத்தில் அவர் கேலி செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவருடைய ஆசிரியர்கள் அவருக்கு புத்தகங்களை வழங்க மறுத்துவிட்டனர். எனவே அவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே முறையான கல்வியைப் பெற முடிந்தது.








அப்துவின் பள்ளி தோழர்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் அவரை அடிப்பார்கள். அவரது குடும்பம் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச வழிகளைக் கொண்டிருந்தது மற்றும் அவரது குறைப்பாடுக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் வாங்க முடியவில்லை. எழுதப் படிக்கத் தெரியாத அப்து தன் சொந்த ட்யூன்களை ஹம் செய்து, பாடல் வரிகளை எழுதத் தொடங்கினார்.

 

17 வயதில் IFCM அவரைக் கண்டறிந்தபோது, ​​பணம் சம்பாதிப்பதற்கும் அவரது குடும்பத்திற்கு வழங்குவதற்கும் அப்து தஜிகிஸ்தானின் தெரு பஜார்களில் பாடிக்கொண்டிருந்தார். IFCM யை சேர்ந்த UAE இன் அரச குடும்பத்தின் யஸ்மீன் சஃபியா அவரது திறமையில் முதலீடு செய்ய முடிவு செய்தார்.