தமிழ் சினிமாவில்  90-களின் பிற்பகுதி மற்றும் 20-களின் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன்.  நடனமானாலும் நடிப்பானாலும் தனக்கென தனி பாணியை பின்பற்றிய நடிகை சிம்ரன் , இடுப்பழகி என கொண்டாடப்பட்டார். நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சிம்ரன், தன்னுடைய இயற்பெயர் குறித்தும் தனக்கு பிடித்த, பிடிக்காத படங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.







சிம்ரன் பகிர்ந்ததாவது :


 "என்னுடைய நிஜபெயர் ரிஷி பக்கா. எனது நண்பர்கள் எல்லாம் ரிஷினுதான் கூப்பிடுவாங்க.எனக்கு எப்போதுமே காமெடி படங்கள்தான் பிடிக்கும். கத்தி, சண்டை, கோணிப்பைல அடைக்குறது அப்படி வற்ற ஹெவி ஃபிலிம்ஸ் எதுவுமே எனக்கு பிடிக்கவே பிடிக்காது. நான் தான் கோவில்பட்டி வீரலட்சுமி படம் பண்ணேனா அப்படிங்குறது எனக்கே ஆச்சர்யமா இருக்கு.


பம்மல் கே சம்பந்தம் , பஞ்ச சந்திரம் படங்கள் ரொம்ப பிடிக்கும். வாலி படத்துல எனக்கு அஜித்துக்கும் முழுக்க முழுக்க சொல்லிக்கொடுத்தது இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாதான். நடிகர்கள் எப்போதுமே இயக்குநர்களுடைய எதி்ர்பார்ப்பை பூர்த்தி செய்யுறவங்களாகத்தான் இருக்கனும். சந்திரமுகி திரைப்படம் நான் பண்ணியிருக்க வேண்டியதுதான். மூன்று நாட்கள் ஷூட்டிங் போயாச்சு. அதன் பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று. அதன் பிறகு நான் நடிக்கவில்லை. அந்த படத்துல நான் நடிக்காததற்கு வருத்தப்படவில்லை. காரணம் அது என்னுடைய முதல் குழந்தை அதனால ஹாப்பிதான். இப்போ ரஜினி சாரோடு நடிக்க முடியவில்லை என்றால் என்ன,  எதிர்காலத்தில்  நடிக்கும் நம்பிக்கை இருந்தது.   எப்போதுமே நான் ஃபிட்டா இருக்க வேண்டும்னு நினைப்பேன். எனக்கு அந்த கான்சியஸ் எப்போதுமே இருக்கும். இப்போ கொஞ்சம் குண்டா ஆன கூட , நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அப்போ அந்த  மாதிரியான சூழல் இல்லை.


த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்துல நிறைய இடத்துல அவங்க பெண்களை அவமானப்படுத்தியிருக்காங்க. அந்த படத்துல இது போலத்தான் டயலாக் வரப்போகுது எனக்கு எப்படி தெரியும். தெரிஞ்சா நான் எப்படி நடிப்பேன். எனக்கு இப்படித்தான் படத்தை எடுக்க போறாங்கன்னு தெரியாதுநான் படத்துல டபுள் மீனிங்க்ல நடிக்கல “ என தெரிவித்துள்ளார் சிம்ரன்