பல ஆண்டுகளாக ரசிகர்களை காத்திருக்க வைத்து படு மாஸாக நேற்று திரையரங்குகளில் வெளியானது டாப் ஸ்டார் பிரசாந்தின் 'அந்தகன்' திரைப்படம். தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, கார்த்திக், வனிதா விஜயகுமார் என மிக பெரிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
சார்மிங் நடிகர் பிரஷாந்த், பியூட்டி குயின் சிம்ரன் இவர்களை மீண்டும் திரையில் மாஸாக பார்ப்பதற்கு தானே ரசிகர்கள் இத்தனை நாளாக தவம் இருந்தனர் என்பது போல படம் வெளியான முதல் நாளே கொண்டாடி தீர்த்தனர். பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் 'அந்தகன்' படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு படத்துக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
'அந்தகன்' படத்தின் சிம்மி என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் அசத்தலாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. இந்த பிரஸ் மீட்டில் சிம்ரன் பேசுகையில் "என் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சு இந்த சிம்மி கேரக்டரை எனக்கு கொடுத்த தியாகராஜன் சார் மற்றும் பிரஷாந்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்த மாதிரி ஒரு பர்ஃபார்மன்ஸ் ஓரியண்டட் கேரக்டர் நான் பண்ணி ரொம்ப வருஷமாச்சு. அதனால் நான் ரொம்ப சந்தோஷமா பீல் பண்றேன். சமுத்திரக்கனி சார், கே.எஸ். ரவிக்குமார், பிரியா ஆனந்த், ஊர்வசி மேம், கார்த்திக் சார் இப்படி சொல்லிகிட்டே போகலாம். அவங்க கூட எல்லாம் நான் ஸ்க்ரீன் ஷேர் பண்ணத்தில் ரொம்ப சந்தோஷம். பிஹைண்ட் தி ஸ்க்ரீன்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. ஷூட்டிங் பண்ணும் போது நாங்க எல்லாரும் ஒரே ஃபேமிலி போல இருந்தோம்.
இது போல வுமன் சென்ட்ரிக் ரோல் நிறைய வரணும். நிஜமாகவே மக்களை நாங்கள் சந்தோஷப்படுத்த விரும்புகிறோம். அப்படி ஒரு கேரக்டர் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார். டெக்னீஷன்ஸ், காஸ்ட் எனக்கு சப்போர்ட் பண்ண பிரஸ், மீடியா, மக்கள் என எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்" என கையெடுத்து கும்பிட்டு எமோஷனலாக பேசி இருந்தார் நடிகை சிம்ரன்.
இப்படம் சிம்ரனுக்கு நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை சிம்ரன் தட்டி தூக்கி விடுவார் என்பதை மீண்டும் அந்தகன் படம் மூலம் நிரூபித்துள்ளார். அடுத்தடுத்து அவருக்கு ஏராளமான கேரக்டர் ரோல் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்ரன் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.