சினிமா தவிர்த்து நடிகர்களுக்கு விளம்பர படங்களிலும் பெரிய பங்கு இருந்து வருகிறது. அண்மையில் நடிகர் சிலம்பரசம் காஸா கிராண்ட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆக இந்த நிறுவனத்திற்கு 10 நாட்களில் 950 அடுக்குமாடி வீடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது 

Continues below advertisement

நடிகர் சிம்பு அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி , சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. சினிமா தவிர்த்து . சினிமா தவிர்த்து பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் சிம்பு இருந்து வருகிறார். அந்த வகையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மிந்த்ரா , டென்வர் , அபி பஸ் , ஆஹா தமிழ் , காஸா கிராண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சிம்பு விளம்பர தூதராக இருந்து வருகிறார்.

10 நாட்களில் 950 வீடுகள் விற்பனை 

அண்மையில் சிம்பு காஸா கிராண்ட் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்திருந்தார். கமல் தயாரிப்பில் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வரலாற்று திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருந்தார். இந்த படத்திற்காக அவர் நீண்ட தலைமுடி வைத்திருந்தார் . இதே தோற்றத்தில் அவரை வைத்து கேம் ஆப் த்ரோன்ஸ் ஸ்டைலில் காஸா கிராண்ட் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இந்த விளம்பரம் வெளியானபோது பலரும் இதனை சிம்பு படத்தின் டீசர் என நினைத்து இந்த விளம்பரத்தை வைரலாக்கினர். இது அந்த விளம்பர நிறுவனத்திற்கு பெரியளவில் லாபகரமாக அமைந்துள்ளது. வெறும் 10 நாட்களில் காஸா கிராண்ட் நிறுவனம் 950 அடுக்குமாடி வீடுகளை விற்பனை செய்துள்ளதாக இந்த விளம்பர படத்தை இயக்கியவர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி சிம்பு நடித்து வரும் படம் அரசன். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் சேதுபதி , சமுத்திரகனி , கிஷோர் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.