தமிழ் சினிமாவில் 2008-க்கு பிறகு காமெடி வேடங்களில் கொடிக்கட்டிப்பறந்த நடிகர் சந்தானம் அதன் பிறகு ஹீரோவாக தனது டிராக்கை மாற்றினார். வல்லுவனுக்கு புல்லும் ஆயுதம் அவருக்கு ஓரளவு வெற்றிப்பெற்றது, அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
காப்பாற்றிய ஹாரர் படங்கள்:
ஆனால் சந்தானத்துக்கு பெரிய பிரேக் கொடுத்தது என்னவோ ஹாரர் படங்கள் தான், 2016 ஆம் ஆண்டு லொள்ளு சபாவை இயக்கிய ராம் பாலா தில்லுட்டு துட்டு என்கிற பேய் படத்தை இயக்கினார். சாதராண கதையாக இருந்தாலும் சந்தானம் இந்த படத்தில் ஒரு பேய் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லியுள்ளார். சந்தானம் மற்றும்மொட்டை ராஜேந்திரன் ஆகிய இருவரின் கலக்கல் காமெடி அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து 2019 ஆம் ஆண்டு தில்லுக்கு துட்டு பாகம் இரண்டு வெளியாகி அது நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது.
இதனை அடுத்து 2023 பிரேம் ஆனந்த இயக்கத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கினார். ஒரு அரண்மனையில் பேய்கள் சொல்லும் விளையாட்டை என்கிற கதைக்களத்தில் எடுக்கப்பட்டது, இந்த வசூல் ரீதியிலும் சரி விமர்சன ரீதியிலும் சரி சந்தானத்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
டிடி ரிட்டர்ன்ஸ் 2 next level:
தற்போது இதே ஹிட் காம்போ டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தை எடுத்து முடித்துள்ளனர், யாஷிகா ஆனந்த்,கீதிகா திவாரி, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படத்தை சந்தானத்தின் நண்பரான நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இந்த் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிரெய்லரின்
சிம்பு பேச்சு:
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்துக்கொண்டார், அப்போது பேசிய் அவர் "டிரெய்லரைப் பார்த்தேன், எல்லாம் நல்லா இருந்துச்சு, காமெடி சூப்பரா இருந்துச்சு. ஆனா எங்க டைரக்டர் GVM ஆ இப்படி பண்ணுவீங்கனு எதிர்பாகவே இல்ல . அந்த ஒண்ணு மட்டும் சும்மா விட மாட்டேன் என்று சிம்பு அந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசினார்.
சிம்பு-சந்தானம் காம்போ:
சினிமாவில் நடிகர் சந்தானத்தை அறிமுகப்படுத்தியவர் நடிகர் சிம்பு, ஆனால் ஹீரோவாக சந்தானம் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜா ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான நிலையில் அதில் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் அவர் மீண்டும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பார்க்கிங் படத்தை இயக்கிய ராம் குமார் பாலகிருஷ்ணன் படத்தில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் சந்தானம் காமெடியனாக மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார்