2021 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் நடிப்பில், பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம், மாநாடு. ட்ரெய்லர் வெளியான புதிதில், “என்னடா படம் இது” என குழம்பிய ரசிகர்கள், படம் வெளியானவுடன் “என்னா...படம் டா இது!” என படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்தனர். மாநாடு திரைப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். அது மட்டுமன்றி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திர சேகர், பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.




மாநாடு திரைப்படம்:


டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து காமெடி, த்ரில்லர் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்ததால், படம் மாபெரும் ஹிட் அடித்தது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில், மெஹரசைலா பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் எழுதப்பட்டிருந்த “தலைவரே தலைவரே..” எனும் டயலாக் கூட, மீம்ஸ் க்ரியேட்டர்களிடையே ட்ரெண்ட் ஆனது. 






மாநாடு படத்தின் ஓராண்டு நிறைவு:


இப்படம் வெளியாகி இன்றோடு, ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இதனை கொண்டாடும் விதத்தில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இதற்காக மாராத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னர் அறிவித்திருந்தார்.






விரைவில் மாநாடு படத்தின் அடுத்த படம்?


மாநாடு திரைப்படத்தின் ஓராண்டு கொண்டாட்டம் நடைப்பெற்றதைத் தொடர்ந்து, அப்படம் குறித்த சுடசுட அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், மாநாடு படத்தின் சீக்குவல் (Sequel-தொடர்கதை) உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.