‛சிம்பு கேட்ட கேள்வி... அதற்கு கமல் சொன்ன பதில்’ அரங்கம் அதிர்ந்த வரவேற்பு!

Simbu questions Kamal : உங்கள் ரீ மேக் படத்தில் நான் நடிக்க விரும்பினால் அது எந்த படமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்குறீர்கள்" என்று கேட்டார் சிம்பு.

Continues below advertisement

கமலின் ரீமேக் படத்தில் நடிக்க சிம்பு ஆசை - அது எந்த படம் தெரியுமா?

Continues below advertisement

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக செப்டம்பர் 2ம் தேதியான நேற்று மாலை சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்டார். மேலும் பல திரை பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

 

 

நன்றி கூறிய சிம்பு :
 
"வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தில் லீட் ரோலில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ளார் மற்றும் சித்தி இதானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 15ம் தேதி இப்படம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் சிலம்பரசன் பேசுகையில் "இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களாகிய நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. மேலும் எங்களின் அழைப்பை ஏற்று இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைத்து திரையுலக நட்சத்திரங்களுக்கும் எனது நன்றிகள்"என்றார் சிலம்பரசன்.

 

 

கமல் ரீமேக் படத்தில் சிம்பு :

மேலும் நடிகர் சிம்பு பேசுகையில் " நான் நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். உங்கள் ரீ மேக் படத்தில் நான் நடிக்க விரும்பினால் அது எந்த படமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்குறீர்கள்" என்று கேட்டார். இது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன் " ஒரு படம் மட்டும் அல்ல பல படங்கள் உள்ளன. நீங்கள் நிறைய நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார். இந்த பதில் அங்கு கூடி இருந்த அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் மட்டுமின்றி நடிகர் சிம்புவும் நெகிழ்ச்சி அடைந்தார். கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில் "வெந்து தணிந்தது காடு" படத்தின் இரண்டம் பாகம் நிச்சயம் உண்டு என்பதை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola